தனது வாழ்க்கை, திரைப்படமாக எடுக்கப்பட்டால், அதில் தனது கதாபாத்திரத்தில் நடிக்க, பரினீதி சோப்ரா, தீபிகா படுகோனே, அனுஷ்கா ஆகியோரில் யாரேனும் ஒருவர் பொருத்தமானவராக இருப்பார் என்று பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார்.
இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் சல்மான்கான் கலந்து கொண்டு, சானியா மிர்சாவின் சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார்.
அப்போது பேசிய சானியா மிர்சா, "பெரிய அளவிலான போட்டிகளுக்கு எந்த முறையில் ஆயத்தமாவேனோ, அதேபோன்றுதான் ஒலிம்பிக் போட்டிக்கும் சிறப்பாக தயாராகி வருகிறேன். இங்கே அமர்ந்து கொண்டே ’ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியுமா’ என்று இப்போதே என்னால் கணித்துச் சொல்ல முடியாது. ஆனால், முடிந்தவரை சிறப்பாக விளையாடுவேன்.

ரோகன் போபண்ணாவுடன் இணைந்து பல போட்டிகளில் ஆடிய அனுபவம் எனக்கு உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த எல்லா வகையிலும் முயற்சிப்போம்” என்றார்.
தொடர்ந்து பேசிய சானியா மிர்சா,“ இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஃபாரா கான் எனக்கு நல்ல நண்பர். அவர், என்னை வைத்து படம் எடுக்க இருப்பதாக வெளியான தகவலில் உண்மை எதுவும் இல்லை. எனது வாழ்க்கை குறித்த திரைப்படம் எடுக்கப்படுமா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அப்படி எடுக்கப்பட்டால், அதனை எனக்குக் கிடைத்த கவுரவமாகக் கருதுவேன்.
அந்தப் படத்தில் எனது கதாபாத்திரத்தில் நடிக்க பரினீதி சோப்ரா, தீபிகா படுகோனே, அனுஷ்கா ஆகியோரில் யாரேனும் ஒருவர் பொருத்தமானவராக இருப்பார் என்று தோன்றுகிறது. இவர்களில் பரினீதி என்னைப் போன்ற தோற்றம் கொண்டவர். அவர் நடித்தால் நன்றாக இருக்கும்.
நான் வருங்காலத்தில் சினிமாவில் நடிப்பேனா என்று கேட்கிறீர்கள். சினிமாவில் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஆனால், இப்போதைக்கு நடிக்கும் எண்ணம் இல்லை!’’ என்றார்.
நானும் கிரிக்கெட் வீரராக மாறியிருப்பேன்
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் சல்மான்கான் பேசுகையில், "எனது தந்தை என்னை ஒரு கிரிக்கெட் வீரராக பார்க்க விரும்பினார். அதற்கான சாத்தியமும் இருந்தது. நானும் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக மாறியிருப்பேன். ஆனால் பயிற்சிக்காக காலையிலேயே எழ வேண்டியது இருந்தது. அதனால் கிரிக்கெட்டை விட்டு விட்டேன்'' என்றார் நகைச்சுவையாக.
No comments:
Post a Comment