Monetize Your Website or Blog

Tuesday, 19 July 2016

மக்கள் நலக்கூட்டணி உறுதியாக உள்ளது; திருமாவளவன் கூறியது தனிப்பட்ட கருத்து! - வைகோ

மக்கள் நலக்கூட்டணி உறுதியாக உள்ளது. திராவிட கட்சிகளை எதிர்த்து இருக்கக் கூடாது என திருமாவளவன் கூறியது, அவரது தனிப்பட்ட கருத்து என்று வைகோ கூறினார்.






மதுரை புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மதுரை மாவட்டம் பரவையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ''கேரளம், கர்நாடகம், ஆந்திர அரசுகள் தமிழக மக்களுக்கு பிரச்னைகளை கொடுத்து வருகின்றன. முல்லை பெரியாறு, பாலாறு, காவிரி ஆகியவற்றின் குறுக்கே அணை கட்டுவதன் மூலம் அவர்கள் தொடர்ந்து தமிழகத்திற்கு பிரச்னை செய்கின்றனர்.

இலங்கையில், ஈழத் தமிழர்களுக்கு இலங்கை அரசு பிரச்னை ஏற்படுத்தி வருகிறது. இப்படி, தமிழகத்துக்கு நாலாபுறமும் இருந்து வரும் ஆபத்தை தடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழக மக்களை மாற்றான்தாய் மனப் பான்மையுடன் தான் மத்திய அரசு பார்த்து வருகிறது. இந்த நிலையை மத்திய அரசு கைவிட வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு எதிர்க்க வேண்டும். இதற்காக மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்" என்றார்.

அப்போது அவரிடம் அ.தி.மு.க., தி.மு.க.வை எதிர்த்து இருக்கக் கூடாது என திருமாவளவன் கூறியிருக்கிறாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''அது அவரது தனிப்பட்ட கருத்து. மக்கள் நலக்கூட்டணி உறுதியாக, வலுவாக உள்ளது. சென்னையில் மக்கள் நலக்கூட்டணியின் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்படும்" என்றார்.





No comments:

Post a Comment