Monetize Your Website or Blog

Saturday, 9 July 2016

சிறைத்தண்டனை காரணமாக பார்சிலோனாவை விட்டு வெளியேற மெஸ்சி திட்டம்?


மெஸ்சி குற்றமற்றவர்  தொடர்ந்து பார்சிலோனா அவர்  அணிக்கு விளையாட வேண்டும் ஸ்பானீஷ் லீக்கை விட்டு வெளியேறி விட கூடாது என  லா லீகாத் தலைவர் ஜேவியர் டெபாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக நீண்டகாலம் விளையாடி வருகிறார். அண்மையில் சுமார் 60 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக  பார்சிலோனா நீதிமன்றம் மெஸ்சிக்கும் அவரின் தந்தைக்கும் 21 மாத சிறைத்தண்டனையும் தலா ரூ15 கோடி  அபராதமும் விதித்தது. எனினும் ஸ்பெயின்  சட்டப்படி 2 ஆண்டுகளுக்கு குறைவாக சிறைத்தண்டனைக்குள்ளானால்,  சிறைக்கு செல்ல வேண்டிய நிலை இல்லை. அபராதத்தை செலுத்தினால் போதுமானது. 

இந்த நிலையில் லா லீகா அமைப்பின் தலைவர் ஜேவியர் டெபாஸ் மெஸ்சியின் அறியாமை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். '' நீதிமன்றம் விதித்துள்ள இந்த தண்டனையால் மெஸ்சி கவலைக்குள்ளாக வேண்டாம். எனக்கு இப்போதுள்ள ஒரே கவலை மெஸ்சி  லாலீகாவை விட்டு வெளியேறி விடுவாரா என்பதுதான். 


மெஸ்சி கிரிமினல் அல்ல. அறியாமையால் நடத்த தவறு இது .ஒரு விஷயம் மட்டும் மெஸ்சிக்கு சொல்ல வேண்டுமென்று நினைக்கிறேன். லாலீகா உங்களை நம்புகிறது. நீங்கள் இந்த தொடரில் தொடர்ந்து விளையாட வேண்டுமென்பதே அதன் விருப்பம். எனவே அவர் லாலீகாவை விட்டு வெளியேறி விட வேண்டுமென்று நினைக்க வேண்டிய அவசியம் இல்லை''    என தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment