Monetize Your Website or Blog

Friday, 8 July 2016

கன்டெய்னர் பண விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்குமா?' -குழப்பத்தில் தவிக்கும் ஸ்டேட் வங்கி


சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கன்டெய்னரில் பிடிபட்ட பணம் குறித்து தற்போது புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. ' கன்டெய்னர் விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மட்டுமே, சி.பி.ஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முழுமையான விசாரணைக்கு அல்ல' என அதிர வைக்கின்றனர் வழக்கறிஞர்கள். 

திருப்பூரில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் கன்டெய்னர் பணம் தொடர்பான சர்ச்சை இன்னமும் ஓயவில்லை. தி.மு.க அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ' மூன்று கன்டெய்னர்களிலும் ரூ.570 கோடி பணம் இருந்துள்ளது. இதைக் கொண்டு செல்ல, ரிசர்வ் வங்கி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. ஸ்டேட் பேங்க் அதிகாரிகள், இந்தப் பணத்திற்குக் காலதாமதமாக உரிமை கொண்டாடியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது' எனக் குறிப்பிட்டிருந்தார்.


இதையடுத்து, கன்டெய்னர் தொடர்பான சர்ச்சைகள் தொடர்பாக விசாரிப்பதற்கு முகாந்திரம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்கு சி.பி.ஐக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். சி.பி.ஐ அதிகாரிகளும் கோவையில் முதல்கட்ட விசாரணையைத் தொடங்க உள்ளனர். 
இதுபற்றி நம்மிடம் பேசிய வங்கி அதிகாரி ஒருவர், " கன்டெய்னரில் பிடிபட்ட பணம் வங்கிக்குச் சொந்தமானது என்பது பற்றிய ஆவணங்களைக் காட்டிவிட்டோம். தேர்தலுக்கு சில நாட்கள் இருந்த நிலையில், மே 13 அன்று கன்டெய்னர் பணத்தை பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையம். வங்கியில் இருந்து பணம் செல்லும் தகவலைத் தெரிந்து கொண்ட சிலர், ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். பணம் பிடிபட்டதில் இருந்து 12 மணி நேரம், இந்த விவகாரத்தைத் தவிர, வேறு எதிலும் எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்தவில்லை. அவர்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக கன்டெய்னர் செய்தி பரப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். இதற்கு வங்கியில் உள்ள சிலர் காரணமாக இருந்திருக்கக்கூடும்.


அந்த நேரத்தில், தேர்தல் அலுவலர்களுக்கு முக்கியமான பயிற்சி என்று சொல்லி, அவர்களை வரச் சொல்லிவிட்டு ஆறு மணி நேரம் வெறுமனே உட்கார வைத்துவிட்டு அனுப்பிவிட்டனர். வெறுமனே அவர்கள் வரவழைக்கப்பட்டதற்குப் பின்னணியில் ஏதோ நடந்திருக்கிறது. வேறு வகையில் பணத்தைக் கொண்டு செல்வதற்காக, கன்டெய்னர் விவகாரம் திசைதிருப்பப்பட்டதா எனவும் ஆய்வு செய்து வருகிறோம். சி.பிஐ-யின் முதல்கட்ட விசாரணையின் முடிவில், அனைத்து உண்மைகளும் வெளியில் வந்தால்தான், எங்கள் மீதான களங்கம் துடைக்கப்படும்" என்றார். 

' சி.பி.ஐ விசாரணை எப்போது தொடங்கும்' என அரசுத் தரப்பு வழக்கறிஞர் வட்டாரத்தில் விசாரித்தோம்.
" கன்டெய்னர் பணம் தொடர்பான வழக்கு, விசாரணைக்கு உகந்ததா என சி.பி.ஐ அதிகாரிகள் உறுதி செய்தால் மட்டுமே, முழுமையான விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிடும். இவ்வளவு பணத்தை தேர்தல் நேரத்தில் தனிநபர் எடுத்துச் செல்லக் கூடிய வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஒரு வாரம் கழித்தும் பணத்தைக் கொண்டு சென்றிருக்கலாம். அதிகாரிகளுக்குள் சரியான ஒருங்கிணைப்பு இருந்திருந்தால், இந்தளவுக்கு கன்டெய்னர் விவகாரம் கேள்வி எழுப்பப்பட்டிருக்காது. அத்தனை சர்ச்சைகளுக்கும் வங்கி அதிகாரிகள்தான் காரணம். சி.பி.ஐ தாக்கல் செய்யப் போகும் முதல்கட்ட விசாரணை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம்" என்றார் விளக்கமாக.  

தேர்தல் நெருக்கத்தில் எதிர்க்கட்சிகளின் கவனத்தை திசைதிருப்ப கன்டெய்னர் விவகாரம் கருவியாக்கப்பட்டதா என்ற மிக முக்கியமான கேள்விக்கான விடை, சி.பி.ஐ 




No comments:

Post a Comment