Monetize Your Website or Blog

Friday, 8 July 2016

மீண்டும் கிளம்பும் குவாரி பலி!.. மதுரையில் 3 பேர் துரதிர்ஷ்டவசமாக மரணம்...





துரை வாடிப்பட்டி தாலுக்காவை சேர்ந்த கொண்டையம்பட்டி கிராமத்தில் இருக்கும் குவாரியில் 3 பேர் பலியாகியுள்ளனர்.மேலும் ஒருவர் காயத்துடன் உயிர் தப்பினார்.இந்தச் சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சக்கிமங்கலம் சேகர் என்பவர் பெயரில் அரசியல்வாதிகள் சிலரின் தலைமையில் இயங்கிவரும் இந்த குவாரியில் வெடிவைக்கும் பணியில் பெருமாள்பட்டியைச்  சார்ந்த ராமு, நடுப்பட்டி கிராமத்தைச் சார்ந்த நல்லையன், தெத்தூர் செந்தில்குமார் மற்றும் கொண்டையம்பட்டி சுதர்சன் உள்ளிட்ட  தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது தீடீர் என்று குவாரிக்குள் அதிக அதிர்வு ஏற்பட்டு மணல் சரிந்துள்ளது. மணல் சரிவின் வேகம்  அதிகமாக, கயிற்றில் தொங்கியபடி வெடிவைக்கும் வேளையில் இருந்த அவர்களுக்கு,  பிடிமாணமாக இருந்த கற்களும் சரிய ஆரம்பித்தன. வேலை பார்த்துகொண்டிருந்த இவர்களின் மீது கற்களும் மணலும் கொட்ட ஆரம்பித்தது. இதில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர்.சுதர்சன் என்பவர் மட்டும் மேட்டுப் பகுதியில் குதித்து உயிர்தப்பினார்.  



இந்த சம்பவத்தையடுத்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி விஜேந்திரபிதாரி சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியைத்  துரிதப்படுத்தினார். மேலும் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மற்றும் அமைச்சர்கள் விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டனர் .இறந்தவர்கள் உடல்கள்  வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்குக்  கொண்டு செல்லப்பட்டுள்ளன.காயமடைந்த சுதர்சன் சிறிய நெஞ்சுவலியோடு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

No comments:

Post a Comment