Monetize Your Website or Blog

Friday, 8 July 2016

ரூ.60 லட்சம் மதிப்புள்ள தலை முடி மூட்டைகளைக் காணோம்: இருக்கன்குடியில் பரபரப்பு!


இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்புள்ள தலை முடி மூட்டைகளைக்  காணவில்லை என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ளது இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில். தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் இது. இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டுச்  செல்வார்கள். அதோடு நேர்த்தி கடனாக பக்தர்கள் ‘‘ மொட்டை ’’ போட்டுச் செல்வது உண்டு. பக்தர்களிடம் இருந்து காணிக்கையாகப்  பெற்ற முடியை மூடைகளில் பாதுகாப்பாக வைத்திருந்து பிறகு கோவில் நிர்வாகத்தினர் ஏலம் விடுவது வாடிக்கை.

கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக பரம்பரை அறங்காவலர்கள் குழுவினர் இருவர் இடையே இங்கு மோதல் நடந்து வருகிறது. இதனால் கடந்த இரு ஆண்டுகளாகக்  காணிக்கையாகப் பெற்ற முடியை ஏலம் விடவில்லை.

இதனால் கோவிலில் மொட்டை போடும் இடத்தில் 25 மூடைகளில் முடிகளை வைத்து கோவில் நிர்வாகத்தினர் பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் உள்ளே நுழைந்த மர்மநபர்கள் காணிக்கை முடிகளில் 15 மூடைகளைத் திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.60 லட்சமாகும். இது தொடர்பாகக்  கோவில் நிர்வாகம் சார்பில் இருக்கண்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.




No comments:

Post a Comment