இந்தியாவில் உள்ள வங்கிகளில் இருந்து 8.5 லட்சம் கோடி ரூபாயை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முறைகேடாக மத்திய அரசு வழங்கியுள்ளதை, வெளிக்கொண்டு வந்திருக்கிறார் சி.பி.எம் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி. ' வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட இந்தப் பணத்தைத் திரும்பப் பெறுதல் சாத்தியமில்லை' எனவும் அவர் அதிர வைக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட நரேந்திர மோடி அறிவித்த பிரசார வாக்குறுதிகளில் மிக முக்கியமானதுகறுப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15 முதல் 20 லட்ச ரூபாயைச் செலுத்துவேன் என்பதுதான். அந்த வாக்குறுதி இன்று வரையில் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில், பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் சீதாராம் யெச்சூரி. அந்தக் கடிதத்தில், " தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளைக் கைவிட்டது மட்டுமல்ல, உங்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளின் பணமே, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. சி.ஏ.ஜி (தலைமை கணக்காயர்)யின் வார்த்தைகளில் சொன்னால், ' வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுவிட்ட பணத்தை, திரும்பப் பெறுதல் சாத்தியமில்லை'.
சென்ற ஆண்டு கணக்கீடுகளின்படி, அதானி குழுமம் ரூ. 96,031 கோடி, எஸ்ஸார் குழுமம் 1.01 ட்ரில்லியன் ரூபாய், ஜி.எம்.ஆர் குழுமம் ரூ.47,976 கோடி, ஜி.வி.கே. குழுமம் 33,933 கோடி, ஜே.பீ குழுமம் ரூ.75,163 கோடி, ஜே.எஸ்.டபிள்யூ 58,171 கோடி, லான்கோ குழுமம் ரூ.47,102 கோடி, ரிலையன்ஸ் 1.25 ட்ரில்லியன் ரூபாய், வேதாந்தா குழுமம் 1.03 ட்ரில்லியன் ரூபாய், வீடியோகான் குழுமம் 45,405 கோடி ரூபாய் என மொத்தம் ரூ.7 லட்சம் கோடிகளைக் கடனாகப் பெற்றுள்ளன.
இதில், 5 லட்சம் கோடியே 60 லட்சம் ரூபாய் பணத்தை, வாராக்கடன் பட்டியலில் வங்கிகள் இணைத்துவிட்டன. இவை அனைத்தும் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. இவற்றைத் திரும்பப் பெறுதல் சாத்தியமில்லை என சி.ஏ.ஜி சசிகாந்த் சர்மா கூறுகிறார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள, இவ்வளவு பெரிய தொகையால், இந்தியப் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கும்" என எச்சரிக்கைத் தொனியில் நிறைவு செய்திருக்கிறார் யெச்சூரி.
இதைப் பற்றி நம்மிடம் பேசிய சி.பி.எம் கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், " ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பணமாக மட்டும் பெருந்தொகைகளை, இந்திய வங்கிகள் வாரி இறைத்துள்ளன. இதுவரையில் 8.5 லட்சம் கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பணத்தில் பெரும்பகுதி வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டன. இவற்றைத் திரும்பப் பெறுதல் என்பது சாத்தியமில்லை என தலைமை கணக்காயரே சொல்கிறார்.

அப்படியானால், திட்டமிட்டே இவ்வளவு தொகை வாரியிறைக்கப்பட்டனவா? கல்விக் கடன், பயிர்க்கடன் என எளிய மக்கள் சென்றால், வங்கிகளிடம் உரிய பதில் கிடைப்பதில்லை. அதுவே, மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 'லோன்' என்ற பெயரில் நமது வங்கிகளின் பணம் வாரியிறைக்கப்பட்டுள்ளது. யெச்சூரியின் கேள்விகளுக்கு மோடி பதில் அளிக்க வேண்டும். ரகுராம் ராஜன் பதவி விலக வேண்டும் எனக் கொதித்தவர்கள் எல்லாம், கார்ப்பரேட்டுகளுக்கு கொட்டிக் கொடுக்கப்பட்ட வங்கிப் பணம் குறித்து வாய் திறப்பார்களா?" என ஆதங்கப்பட்டார்.
'வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைத் திரும்பக் கொண்டு வருவோம் என முழங்கிய பா.ஜ.க அரசு, வங்கிப் பணம் வகைதொகையில்லாமல் கொடுக்கப்பட்டது குறித்து என்ன சொல்லப் போகிறது' எனக் கேள்வி எழுப்புகின்றனர் எதிர்க்கட்சிகள்.

No comments:
Post a Comment