'தமிழகம் முழுவதும் அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு வைக்காமல், மறைமுகமாக கமிஷன் பெற்றுக் கொண்டு மாறுதல் வழங்குகிறது உயர் கல்வித்துறை இயக்குநரகம்' என ஆதங்கப்படுகின்றன ஆசிரியர் அமைப்புகள்.
" ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம். ஜூன் மாதம் பணிமாறுதல் பெறும் ஆசிரியர், ஆகஸ்ட்டில் தொடங்கும் வகுப்புகளுக்குத் தயார்படுத்திக் கொள்ள ஏதுவாக இருந்து வந்தது. இப்போது ஜூலை மாதம் தொடங்கியும் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்த தேதியை அரசு இன்னமும் அறிவிக்கவில்லை. இதனால், தங்களைத் தேடி வரும் ஆசிரியர்களுக்கு 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் பணம் பெற்றுக் கொண்டு மாறுதல் வழங்குகின்றது உயர் கல்வித்துறை இயக்குநரகம்" என்கிறார் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் தமிழ்மணி.
தொடர்ந்து அவர், " இன்றைக்கு கோவையைச் சேர்ந்த ஓர் ஆசிரியருக்கு இந்த அடிப்படையில் பணி மாறுதல் ஆணை வழங்கியுள்ளனர். கடந்த வாரத்தில் சிலர் மாறுதல் ஆணை வாங்கியுள்ளனர். இது முற்றிலும் கண்டனத்திற்குரியது. மாநிலம் முழுவதும் 80 அரசுக் கல்லூரிகளும் 7 பி.எட் கல்லூரிகளும் செயல்படுகின்றன. இவற்றில் எண்பதாயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், முதல்தரமான அரசுக் கல்லூரிகளில் 38 முதல்வர் பணியிடங்களும், இரண்டாம் தரம் வாய்ந்த கல்லூரிகளில் 17 முதல்வர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், மாணவர் சேர்க்கையில் மிகுந்த சிரமங்களை அரசுக் கல்லூரிகள் சந்தித்துள்ளன.

மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்களில் 5 பதவிகள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பாமல் அரசு காலதாமதம் செய்து வருகிறது. உயர் கல்வித் துறையை அரசு கவனிக்காமல் விடுவதால், அதில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் கமிஷன் வாங்குவதில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். மாணவர்களின் கல்வித் தரத்தைப் பற்றியோ, மாணவர் சேர்க்கையின் போது ஆசிரியர்கள் படுகின்ற சிரமத்தைப் பற்றியோ அவர்களுக்கு எந்தவிதக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், உயர் கல்விக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்கிறார் முதல்வர்.
தவிர, பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்த தேதிகள் அறிவிக்கப்படாததால், மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்போது கலந்தாய்வு என்பது குறித்து அதிகாரிகளும் பதில் சொல்ல மறுக்கின்றனர். மறைமுகமான வழியில் பணிமாறுதல் ஆணைகளை நிரப்பவே அதிகாரிகள் விரும்புகின்றனர். அதற்காகவே, கலந்தாய்வை தாமதப்படுத்துகிறார்களோ என்ற சந்தேகமும் எங்களுக்கு வருகிறது" என்றார் ஆதங்கத்தோடு.
அரசின் கலந்தாய்வு தேதிக்காக காத்திருக்கிறார்கள் 5 ஆயிரம் ஆசிரியர்கள்.

No comments:
Post a Comment