Monetize Your Website or Blog

Friday, 8 July 2016

ஒரு தியேட்டர்... ரெண்டே ரசிகர்கள்; மனைவிக்கு சந்தோஷ சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்!



மாச்சலப்பிரதேசம்; மனைவி தனக்கு பிடித்த நடிகரின் படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக ஒரு தியேட்டரின் மொத்த டிக்கட்டுகளையும் கணவர் 'புக்' செய்த சம்பவம் இமாச்சலபிரதேசத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.



இமாசலப் பிரதேச மாநிலத்தின் ஹமிர்பூர் நகரில் வசிப்பவர் சங்கர் முசாஃபிர். இவருக்கும் கீதாஞ்சலி என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. மனைவியின் மீது சங்கர் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். தனது அன்பை வெளிப்படுத்த அவர் செய்த விஷயம், இப்போது கீதாஞ்சலியை நெகிழ வைத்துவிட்டது. ஆம் ஹிந்தி நடிகர் சல்மான்கானின் தீவிர ரசிகையான தனது மனைவி கீதாஞ்சலியை மகிழ்விப்பதற்காக சங்கர் ஒரு திட்டம் தீட்டினார். 

சல்மான்கானின் நடிப்பில் சமீபத்தில் 'சுல்தான்' திரைப்படம் ஹமிர்பூர் நகரில் ஒரு திரையரங்கில் நேற்று வெளியானது. அந்தப் படத்திற்காக திரையரங்க உரிமையாளரை இரண்டு தினங்களுக்கு முன்பே சந்தித்து, முதல்நாள் காட்சிக்காக அனைத்து டிக்கெட்டுகளையும் சங்கர் முசாஃபிர் 'புக்' செய்துகொண்டார்.

சங்கர் தனது உறவினர்களை அழைத்து வருவார் என திரையரங்க உரிமையாளர் நினைத்துக்கொண்டார். ஆனால் படம் பார்க்கச் சென்றது சங்கரும் அவரது மனைவி கீதாஞ்சலி மட்டுமே. இதனால் திரையரங்க உரிமையாளர் ஆச்சர்யமடைந்து விசாரிக்க, அப்போதுதான் தன் மனைவியை மகிழ்ச்சிக்குள்ளாக்குவதற்காக இப்படி செய்ததாக சங்கர் தெரிவித்தார். ஆச்சர்யமடைந்த தியேட்டர் உரிமையாளர் மனைவி மீது இத்தனை பாசம் கொண்ட சங்கரை பாராட்டினார்.  

"திரையரங்குக்கு 120 பேரையாவது சங்கர் அழைத்து வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், தனது மனைவியை மட்டும் அழைத்து வந்து சுல்தான் படத்தை அவர் கண்டு ரசித்தார். இந்தக்காலத்தில் இப்படியும் ஒரு கணவர்' என ஆச்சயர்யம் கொள்கிறார் தியேட்டர் உரிமையாளர்.




No comments:

Post a Comment