Monetize Your Website or Blog

Friday, 8 July 2016

'கராத்தே' பெண்ணிடம் பாலியல் வம்பு : தர்மஅடி வாங்கினார் உபேர் டிரைவர்!


கொல்கத்தாவில் காரில் வந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த உபேர் டிரைவர் 'தப்பித்தோம் பிழைத்தோம்' என ஓட்டம் பிடித்தார். ஏனென்றால் அந்த பெண்ணுக்கு கராத்தே தெரிந்திருக்கிறது.


கொல்கத்தா ஜதாவ்பூர் பல்கலையில் படித்து வரும் அந்த 27 வயது மாணவி, கடந்த திங்கட் கிழமை இரவு 10. 20 மணியளவில் வீட்டிற்கு செல்வதற்காக  உபேர் டாக்சியை   புக் செய்துள்ளார். ஆரன்ய பவன் என்ற இடத்தில் அவரது தோழி இறங்கி விட, கார் செல்ல வேண்டிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில்  சென்றுள்ளது. இதையடுத்து அந்த மாணவி கூச்சலிட்டுள்ளார். அதற்கு அந்த டிரைவர்,  'பேசால் இரு... கூச்சலிட்டால் உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்' என பதிலுக்கு மிரட்டியுள்ளர்.  

இதையடுத்து  கராத்தே   தெரிந்த அந்த மாணவி, டிரைவரை கடுமையாகத் தாக்கத் தொடங்கியுள்ளார். இதனால் காரின் வேகம் குறையத் தொடங்க, அந்த சமயத்தில் காரில் இருந்து  வெளியே குதித்துள்ளார்.  டிரைவரும் காரை நிறுத்தி  மாணவியை விரட்டிச் சென்றுள்ளார். அப்போது அந்த  மாணவி, டிரைவரை தாறுமாறகத் தாக்கத் தொடங்கியுள்ளார். இதனால் அந்த டிரைவர் ஆத்திரத்தில் காரை ஏற்றி அந்த மாணவியை கொலை செய்யவும் முயற்சித்துள்ளார். அப்போது சாலையோரத்தில் இருந்த தடுப்பு கம்பியை தாண்டிக் குதித்து, அந்த மாணவி உயிர் தப்பித்துள்ளார். பின்னர் அந்த டிரைவர் காரை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார். 



இது குறித்து அந்த மாணவி கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் '' கடந்த 15 வருடங்களுக்கு முன் கராத்தே கற்றிருந்தேன். அந்த அனுபவம்தான் இப்போது எனக்கு உதவி செய்தது. அந்த டிரைவரின் முகத்தில் கையால் தாக்கினேன். அவரது பின்னங்காலில் உதைத்து கீழே விழ வைத்தேன். ஆனால் மீண்டும் எழுந்து என்னைத் தாக்கத் தொடங்கினார். நான் ஓடத் தொடங்கினேன். பாலியல் வன்முறைக்கு இலக்காக நான் விரும்பவில்லை. அதற்காகவே எனது பலத்தையெல்லாம் திரட்டிப் போராடினேன்''  என தெரிவித்துள்ளார். 

கடந்த செவ்வாய்க்கிழமை, அந்த பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து கார் டிரைவர் சந்து பிரமானிக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்போது அந்த 'தைரிய' மாணவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 




No comments:

Post a Comment