சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்காத கோபத்தில், மு.க.ஸ்டாலின் தே.மு.தி.க. நிர்வாகிகளை தி.மு.க.வில் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் என்று தே.மு.தி.க. தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி குற்றஞ்சாட்டி உள்ளார்.

சென்னை அரும்பாக்கத்தில் தே.மு.தி.க.வின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தே.மு.தி.க.வில் இருந்து விலகி சென்ற சந்திரகுமார், பார்த்திபன் ஆகியோர் தே.மு.தி.க.வின் கலை இலக்கிய துணைச் செயலாளர் ராஜேந்திரநாத்திடம் தி.மு.க.விற்கு வந்தால் பதவி பெற்றுத்தருவதாக பேசும் ஒலிப்பதிவு வெளியிடப்பட்டது.
அப்போது பேசிய அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன், தே.மு.தி.க. கூட்டணி அமைக்கவில்லை என்ற கோபத்தில் தான் மு.க.ஸ்டாலின் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்.
இதுபோல் இன்னும் பல ஒலிப்பதிவுகள் எங்களிடம் உள்ளன. அதை தகுந்த நேரத்தில் கேப்டன் விஜயகாந்த் வெளியிடுவார். மேலும், தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தே.மு.தி.க.வை அழிக்க நினைக்கின்றன. ஆனால், தே.மு.தி.க.வை யாராலும் அழிக்க முடியாது" என்றார்.

No comments:
Post a Comment