Monetize Your Website or Blog

Wednesday, 13 July 2016

கோப்பையுடன் வந்த போர்ச்சுகல் விமானத்தை அழைத்து வந்த போர் விமானங்கள்!



ரோப்பிய கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் போர்ச்சுகல் நாடே உற்சாகத்தில் திளைக்கிறது. வீரர்களை கவுரவப்படுத்தும்விதமாக அவர்கள் வந்த விமானத்துக்கு ராணுவ விமானங்கள் வரவேற்பளித்தன.



யூரோ இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்ற போர்ச்சுகல் அணி பாரீசில் இருந்து லிஸ்பன் புறப்பட்டது. வீரர்கள் வந்த  விமானம் போர்ச்சுகல் வான் எல்லைக்குள் நுழைந்ததும் வீரர்களை கவுரவப்படுத்தும் விதமாக போர்ச்சுகல் ராணுவ விமானங்கள் அந்த விமானத்தை வரவேற்று அழைத்து வந்தன. லிஸ்பன் விமான நிலையத்தில் போர்ச்சுகல் தேசிய கொடியின்  வர்ணத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலில் விமானத்தை விட்டு கேப்டன் ரொனால்டோவும் பயிற்சியாளர் சான்டோசும் கோப்பையை கையில் ஏந்தியவாறு வெளியே வந்தனர்.

பின்னர் விமான நிலையத்தில் இருந்து திறந்த வெளி பேருந்தில் வீரர்கள் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.  வெற்றி விழாவை முன்னிட்டு போர்ச்சுலுக்கு தேசிய விடுமுறை அளிக்கப்பட்டது. ஆட்டம் , பாட்டம் , கொண்டாட்டம் என போர்ச்சுகல் நாடே உற்சாகத்தில் திளைக்கிறது.


வெற்றி  குறித்து ரொனாடோ கூறுகையில், ''கிளப்புகளுக்காக விளையாடி எத்தனையோ கோப்பைகளை வென்று விட்டேன். ஆனால் தாய்நாட்டுக்காக எதுவுமே செய்யவில்லை. கோப்பையை வெல்வோம் என்று எங்களில் யாருமே நம்பவில்லை. பல ஆண்டு கால தியாகத்திற்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசு இது, எங்களை நம்பியவர்களுக்கான வெற்றி இது. ஒவ்வொரு போர்த்துக்கீசியருக்கான வெற்றியும் கூட. காயமடைந்து வெளியே சென்றாலும் இரு முறை மைதானத்திற்குள் வர முயற்சித்தேன். ஆனால் எனக்கு மூட்டு கழன்று விட்டது போன்ற உணர்வு. வலியும் கடுமையாக இருந்தது ''என்றார்.


''களத்தில் இருந்தாலும் வெளியே இருந்தாலும் அணிக்காக உழைப்பதில் ரொனால்டோவை மிஞ்ச முடியாது. நாங்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் ரொனால்டோ எங்களுடன் இருக்க வேண்டும் '' என போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் சான்டோஸ் ரொனால்டேவின் டீம் ஒர்க் குறித்து புகழாரம் சூட்டியுள்ளார்.

No comments:

Post a Comment