Monetize Your Website or Blog

Saturday, 16 July 2016

நாள்தோறும் இணைப்பு விழாக்கள்...! தேதி கொடுக்க முடியாதபடி ஸ்டாலின் 'பிசி'யாம்


அடுத்தடுத்து தி.மு.க.வில் இணைய பிற கட்சியினர் தேதி கேட்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு தேதி தர முடியாதபடி திணற வேண்டி இருக்கிறது" என கோவையில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தேர்தலுக்கு முன்னர் துவங்கிய பிற கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா இன்னும் முடிந்தபாடில்லை. தேர்தலில் வெற்றியை தி.மு.க தவறவிட்ட நிலையிலும், தி.மு.க.வில் இணையும் விழாக்கள் தொடர்ந்து வருகிறது. பெரும்பாலானோர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் கோவை மண்டலம்.






கோவைக்கு இன்று (15-ம் தேதி) மாலை வந்த மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தே.மு.தி.க, ம.தி.மு.க, தா.ம.கா கட்சியில் இருந்து 250 பேர் விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.

தொடர்ந்து திருப்பூர், வெள்ளகோவிலில் மாற்று கட்சியினர் நாளை (16-ம் தேதி) இணைகின்றனர். இதன் தொடர்ச்சியாக நாளை மறுதினம் (17-ம் தேதி) சேலத்தில் மக்கள் தே.மு.தி.க.வை கலைத்து தி.மு.க.வில் இணையும் விழா ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது.

இந்நிலையில், கோவையில் இன்று பிற கட்சியினர் இணையும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் இல்லை. அவ்வளவு தான். சட்டமன்றத்தில் 89 எம்.எல்.ஏ.க்களுடன் பலம் வாய்ந்த எதிர்கட்சியாக தி.மு.க உள்ளது. ஆட்சி செய்யும் இடத்தில் இல்லாவிட்டாலும், ஆட்சி செய்பவர்களை தட்டிக்கேட்கும் இடத்தில் தி.மு.க உள்ளது.



தி.மு.க இன்று ஆட்சியில் இல்லை. ஆனாலும், திமுகவை நாடி தினமும் ஏராளமானோர் வருகின்றனர். அடுத்தடுத்து தி.மு.க.வில் இணைய பிற கட்சியினர் தேதி கேட்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு தேதி தர முடியாதபடி திணற வேண்டியுள்ளது. இருப்பினும், அடுத்தடுத்து, பிறகட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழாக்கள் தினமும் நடக்கிறது. வழக்கமாக ஆளுங்கட்சியில் சென்று தான் பிற கட்சியினர் இணைவார்கள். ஆனால், தி.மு.க.வில் இணைய காரணம். தி.மு.க மீதுள்ள நம்பிக்கை தான்.


தி.மு.க தேர்தல் களத்தில் பலமுறை வென்றுள்ளது. பலமுறை தோற்றுள்ளது. வெற்றியால் வெறி கொண்டு அலைந்ததும் இல்லை. தோல்வியால் துவண்டதும் இல்லை. தி.மு.க தேர்தலுக்கான இயக்கம் அல்ல. மக்களுக்கான இயக்கம்.

கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு எந்த நலனும், பலனும் அளிக்காத ஆட்சி தமிழகத்தில் நடந்தது. கல்வி, தொழில்துறையில் கடைசி இடத்தில் தமிழகம் இருக்கிறது. சட்டம் ஒழுங்கிலும் மிக மோசமான இடத்தில் இருக்கிறது. இப்போதும் அவர்களே 2வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளனர். இப்போது நிலைமை மிக மோசம். குற்றங்களை கட்டுப்படுத்த முடியாத ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது'' என்றார்.





No comments:

Post a Comment