Monetize Your Website or Blog

Wednesday, 6 July 2016

ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்ப்பு... திருப்பூரில் முசுரூதின் மனைவி, சகோதரரிடம் போலீஸ் விசாரணை


ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்த்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள முசுருதீன் மனைவி, சகோதரரிடம் நுண்ணறிவுப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



   


மேற்கு வங்காள மாநிலம் மிர்பூம் மாவட்டத்தை சேர்ந்தவர் முசுருதின். இவருக்கு ஐ.எஸ் பயங்கரவத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறி நேற்று விஸ்வ பாரதி பயணிகள் ரயிலில், போலீசார் அவரைக் கைது செய்தனர். முசுருதினிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், ஐ.எஸ் மற்றும் வங்காளதேசத்தில் இயங்கி வரும் ஜே.எம்.பி பயங்கரவாத அமைப்பின் தலைவர்களுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாக முசுரூதின் ஒத்துக்கொண்டதாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் என்று பி.டி.ஐ. செய்தி வெளியிட்டு இருந்தது. 

மேலும், முசுருதினிடம் 6 சிம்கார்டுகள் 2 போலி வாக்காளர் அடையாள அட்டைகள், லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருப்பூரில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, திருப்பூரில் உள்ள முசுருதினின் மனைவி மற்றும் 2 குழந்தைகள், சகோதரர் அஸ்துல்லாவிடம் நுண்ணறிவுப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



திருப்பூரில் உள்ள ஆண்டிப்பாளையம் அருகே 6 வருடங்களாக முசுருதின் மளிகைக் கடை நடத்தி வந்ததாகவும், ஐ.எஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



No comments:

Post a Comment