Monetize Your Website or Blog

Friday, 8 July 2016

கொச்சி மெட்ரோவில் கஸ்டமர் கேர் பிரிவில் திருநங்கைகள்!


கொச்சி மெட்ரோ ரயில் சேவைத் திட்டத்தில், கஸ்டமர் கேர் பிரிவில் திருநங்கைகளுக்கு பணிவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.


கேரள மாநிலத்தில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். இவர்களின் வளர்ச்சிக்காக கேரள அரசு பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே திருநங்கைகளுக்கு என்றே தனிக் கொள்கையை கேரள அரசு வகுத்துள்ளது. இந்தியாவிலேயே திருநங்கைகளுக்கு என்று தனிக் கொள்கையை வகுத்த ஒரே மாநிலம் கேரளாதான். அதனடிப்படையில், கொச்சி மெட்ரோ ரயில் சேவையில் திருநங்கைகளுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. 

கொச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள், விரைவாக நடந்து வருகின்றன. சோதனை ஓட்டமும் நடக்கிறது. அடுத்த ஆண்டுவாக்கில் கொச்சி நகரில்  மெட்ரோ ரயில் சேவைத் தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு பணியில் அமர்த்தப்படும் திருநங்கைகள் ரயில் நிலைய பராமரிப்பு, கூட்டத்தை கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள்.
இது குறித்து கொச்சி மெட்ரோ சேவை மேலாண் இயக்குநர் எலியாஸ் ஜார்ஜ் கூறுகையில்,'' நாட்டிலேயே கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தில்தான் முதன்முறையாக திருநங்கைகள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். ஒப்பந்தத் தொழிலாளர்களாக பரீட்சார்த்த முறையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது'' என்றார். 




No comments:

Post a Comment