தேஜாஸ் விமானத்தில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ள காவிரி விமான என்ஜினை மேம்படுத்த பிரான்ஸ் உதவியளிக்க முன்வந்துள்ளது.
கடந்த 1986ம் ஆண்டு உள்நாட்டிலேயே போர் விமானங்களை தயாரிக்க இந்திய விமானப்படை முடிவு செய்து, தேஜாஸ் விமானத்தைத் தயாரித்தது. அண்மையில் இரு தேஜாஸ் விமானங்கள் முதல் கட்டமாக இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டன. பெங்களுருவில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்( டிஆர்டிஓ), தேஜாஸ் விமானத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது.
மேலும் தேஜாஸ் விமானத்தில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட என்ஜினை பயன்படுத்த டி.ஆர்.டி .ஓ திட்டமிட்டு, காவிரி என்ற பெயரில் போர் விமான என்ஜினை தயாரிக்கும் பணியைத் தொடங்கியிருந்தது. இதற்காக 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது விமான என்ஜின் தயாரிக்கும் பணி, முடியும் தருவாயைத் நெருங்கியுள்ளது. இன்னும் 25 முதல் 35 சதவிகித பணிகள் எஞ்சியிருக்கின்றன.
முக்கிய கட்டத்தை எட்டியுள்ள விமான என்ஜின் உருவாக்கத்திற்கு உதவ, தற்போது பிரான்ஸ் முன்வந்துள்ளது. பெங்களுருவில் உள்ள டி.ஆர்.டி.ஓ மையத்துக்கு சென்ற பிரெஞ்சு நிபுணர்கள், காவிரி விமான என்ஜின் தயாரிப்பு பணிகளைப் பார்வையிட்டனர்.

பிரெஞ்சு தயாரிப்பான ரஃபேல் போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் எம் 88 ரக விமான என்ஜினை தயாரிப்பதில் இவர்கள் நிபுணத்துவம் பெற்றவர்கள் . பிரெஞ்சு நிபுணர்கள் உதவியுடன் அடுத்த 18 மாதத்தில் காவிரி என்ஜின் தயாரிப்பு பணி முற்று பெற்று விடும்.
முற்றிலும் உள்நாட்டு தயாரிப்புகளைக் கொண்டுதான் தேஜாஸ் தயாரிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக என்ஜின் தயாரிக்கும் பணி முற்றுப் பெறவில்லை. இதையடுத்து, தேஜாஸ் விமானத்துக்காக அமெரிக்காவிடம் இருந்து 41 ஜிஈ 404 மற்றும் 99 ஜிஈ 414 விமான என்ஜின்கள் வாங்கப்பட்டது.
இந்த என்ஜின்கள்தான் தேஜாஸ் விமானத்தில் தற்போது பொருத்தப்பட்டுள்ளன. காவிரி என்ஜின் தயாரிப்புப் பணி முற்று பெற்றவுடன் , 2018ம் ஆண்டு முதல் மேம்படுத்தப்பட்ட தேஜாஸ் விமானத்தில் பொருத்தப்படும்.
No comments:
Post a Comment