Monetize Your Website or Blog

Thursday, 26 May 2016

புதிய மின் கட்டணம்:100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் எவ்வளவு செலுத்தவேண்டும்?




 
தமிழகத்தில் வீடுகளுக்கான புதிய மின் கட்டணத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 100 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்குக்  கட்டணம் கிடையாதுஎன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 120 யூனிட் வரை பயன்படுத்தும்போது, முதல் 100 யூனிட் கழிக்கப்பட்டு மீதமுள்ள 20 யூனிட்டிற்கு மட்டும் 50 ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 160 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு 110 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

200 யூனிட் வரை பயன்படுத்தினால் 170 ரூபாய் செலுத்த வேண்டும். 250 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு 380 ரூபாய் செலுத்தவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 300 யூனிட் வரை பயன்படுத்தினால் 530 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் 450 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு 980 ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

500 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு 1,130 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 650 யூனிட் வரை பயன்படுத்துவோர் 2,770 ரூபாயும், 800 யூனிட் வரை பயன்படுத்துவோர் 3,760 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். 950 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு 4,750 ரூபாயும், 1,100 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு 5,740 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 




No comments:

Post a Comment