கடந்த 29 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முழுத்தேர்ச்சி பெற்று வருகிறது ஈரோடு குமரப்பா செங்குந்தர் பெண்கள் உயர் நிலைப்பள்ளி. பொதுவாக தனியார் பள்ளிகள்தான் முழுத்தேர்ச்சி விகிதம் தரும். ஆனால் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளி தொடர்ந்து பொதுத் தேர்வில் முதல் இடம் பெற்று வருவது அப்பகுதி பெற்றோர்களை அசர வைக்கிறது.
எப்படி சாத்தியமானது இந்த சாதனை... கற்பிக்கும் முறையில் என்ன வித்தியாசம்? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறார் அப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை எஸ்.ரேவதி
" 1976ல் தொடங்கிய எங்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ளது. மொத்தம் 696 மாணவிகள் படிக்கிறார்கள். இதில் 186 மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார்கள். கடந்த 29 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முழு தேர்ச்சியை எங்கள் பள்ளி பெற்று வருகிறது. பலதரப்பில் இருந்து பாராட்டுகள் வருவது, எங்கள் ஆசிரியர்களுக்கு மேலும் உற்சாகத்தை தருகிறது. இந்த வருடம், எங்கள் பள்ளியில் 489 மதிபெண் முதல் இடம். கடைசி மதிப்பெண் 290.
மாணவிகளை நான்கு விதமாக தரம் பிரிப்போம். நன்கு படிப்பவர்கள், சராசரி, மெல்ல கற்போர், மிக மெல்ல கற்போர் என நான்கு வகையில் பிரிப்போம். இதில் மெல்ல கற்கும் மாணவிகள்தான் பாஸ் மார்க் வாங்கக்கூட சிரமப்படுவார்கள். அவர்களுக்கு அதிக கவனம் செலுத்துவோம். அவர்களுக்கு புரியும் படியும், புரியும் வரையும் பாடம் சொல்லிக்கொடுப்போம்.
நல்ல படிக்கும் மாணவிக்கு , எதனால் மதிபெண் குறைகிறது என கவனித்து, அதை சரிசெய்வோம். முக்கியமாக ஒன்பதாவது வகுப்பில் அந்த ஆண்டு பாடத்தை மட்டும்தான் எடுப்போம்.
தனியார் பள்ளிகளில்தான் பெயில் மார்க் எடுக்கும் மாணவர்களை தவிர்த்துவிட்டு, நல்ல படிக்கும் மாணவர்களை மட்டுமே தேர்வு செய்வார்கள். பாஸ் மார்க் எடுக்க முடியாத மாணவர்களை ஒதுக்கி அனுப்பிவிடுவார்கள். ஆனால் அரசு பள்ளியில் அதை செய்ய முடியாது. அதை பள்ளிகள் செய்யவும் கூடாது. எங்கள் பள்ளியில் எல்லா தரத்தில் இருக்கும் மாணவிகளையும் சேர்த்துக்கொண்டு, அவர்களை தேர்வு பெறச் செய்வோம். அதுதான் ஒரு பள்ளியின் கடமை.
பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு, பள்ளி நேரம் தவிர ஸ்பெஷல் கிளாஸ் வைப்போம். போன வருஷம் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்தார்கள். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வைக்காமல், விளையாட்டு மற்றும் இதரப் போட்டிகள், தனித்திறமைகள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துவோம்.
எங்கள் பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவிகள்தான் அதிக அளவில் இருக்கிறார்கள். அவர்களின் அன்றாட வாழ்வு நிலையில், படிப்பது சிரமம். அன்றாடம் அவர்கள் சந்திக்கும் பொருளாதார சிரமத்திற்கிடையே, படிப்பு மேல் கவனம் செலுத்த முடியாமல் திணறுகிறார்கள். எனவே அந்த மாணவிகளின் நிலையை புரிந்துகொண்டு. ஒவ்வொரு மாணவி மீதும் தனி அக்கறை எடுத்துக்கொண்டு அவர்களை படிக்க வைப்போம்.
எந்த மாணவிக்கும் படிப்பு வராது என்பது கிடையாது. எல்லா மாணவர்களுக்கும் புரியும்படி ஆசிரியர்களுக்கு நடத்த தெரியணும்.. இதை தனியார் பள்ளிகள் உணர வேண்டும்.” என்கிறார் ரேவதி.
" 1976ல் தொடங்கிய எங்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ளது. மொத்தம் 696 மாணவிகள் படிக்கிறார்கள். இதில் 186 மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார்கள். கடந்த 29 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முழு தேர்ச்சியை எங்கள் பள்ளி பெற்று வருகிறது. பலதரப்பில் இருந்து பாராட்டுகள் வருவது, எங்கள் ஆசிரியர்களுக்கு மேலும் உற்சாகத்தை தருகிறது. இந்த வருடம், எங்கள் பள்ளியில் 489 மதிபெண் முதல் இடம். கடைசி மதிப்பெண் 290.
மாணவிகளை நான்கு விதமாக தரம் பிரிப்போம். நன்கு படிப்பவர்கள், சராசரி, மெல்ல கற்போர், மிக மெல்ல கற்போர் என நான்கு வகையில் பிரிப்போம். இதில் மெல்ல கற்கும் மாணவிகள்தான் பாஸ் மார்க் வாங்கக்கூட சிரமப்படுவார்கள். அவர்களுக்கு அதிக கவனம் செலுத்துவோம். அவர்களுக்கு புரியும் படியும், புரியும் வரையும் பாடம் சொல்லிக்கொடுப்போம்.
நல்ல படிக்கும் மாணவிக்கு , எதனால் மதிபெண் குறைகிறது என கவனித்து, அதை சரிசெய்வோம். முக்கியமாக ஒன்பதாவது வகுப்பில் அந்த ஆண்டு பாடத்தை மட்டும்தான் எடுப்போம்.
தனியார் பள்ளிகளில்தான் பெயில் மார்க் எடுக்கும் மாணவர்களை தவிர்த்துவிட்டு, நல்ல படிக்கும் மாணவர்களை மட்டுமே தேர்வு செய்வார்கள். பாஸ் மார்க் எடுக்க முடியாத மாணவர்களை ஒதுக்கி அனுப்பிவிடுவார்கள். ஆனால் அரசு பள்ளியில் அதை செய்ய முடியாது. அதை பள்ளிகள் செய்யவும் கூடாது. எங்கள் பள்ளியில் எல்லா தரத்தில் இருக்கும் மாணவிகளையும் சேர்த்துக்கொண்டு, அவர்களை தேர்வு பெறச் செய்வோம். அதுதான் ஒரு பள்ளியின் கடமை.
எங்கள் பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவிகள்தான் அதிக அளவில் இருக்கிறார்கள். அவர்களின் அன்றாட வாழ்வு நிலையில், படிப்பது சிரமம். அன்றாடம் அவர்கள் சந்திக்கும் பொருளாதார சிரமத்திற்கிடையே, படிப்பு மேல் கவனம் செலுத்த முடியாமல் திணறுகிறார்கள். எனவே அந்த மாணவிகளின் நிலையை புரிந்துகொண்டு. ஒவ்வொரு மாணவி மீதும் தனி அக்கறை எடுத்துக்கொண்டு அவர்களை படிக்க வைப்போம்.
எந்த மாணவிக்கும் படிப்பு வராது என்பது கிடையாது. எல்லா மாணவர்களுக்கும் புரியும்படி ஆசிரியர்களுக்கு நடத்த தெரியணும்.. இதை தனியார் பள்ளிகள் உணர வேண்டும்.” என்கிறார் ரேவதி.

No comments:
Post a Comment