Monetize Your Website or Blog

Thursday, 26 May 2016

தமிழிசை தேடிச்சென்ற 19,167 பேர்!

விருகம்பாக்கம் தொகுதியில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

நடந்தமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. திமுக கூட்டணி 98 இடங்களை பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது.

 

திமுக அதிமுகவிற்கு அடுத்த பெரிய கட்சியான பாஜக தமிழக தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை உள்பட போட்டியிட்ட அனைவரும் பலத்த தோல்வியை தழுவியுள்ளனர். 

பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சரவையின் பலம் வாய்ந்த அமைச்சர்கள் படையெடுத்தும் பாஜகவின் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. 
தமிழிசை சவுந்தரராஜன் தான் போட்டியிட்ட விருகம்பாக்கம் தொகுதியில் 19,167 ஓட்டுக்களைப் பெற்று 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இதனிடையே அவர் நேற்று தனக்கு வாக்களித்த விருகம்பாக்கம் தொகுதி வாக்காளர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார். தோல்வியடைந்தாலும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க நேரில் வந்ததை ஆச்சர்யத்துடன் பார்த்தனர் தொகுதிமக்கள். உடன் அவரது கணவர் டாக்டர் சவுந்தரராஜனும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 



No comments:

Post a Comment