Monetize Your Website or Blog

Wednesday, 25 May 2016

தாவூத் இப்ராஹிம் விரைவில் கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டு வரப்படுவார்! -ராஜ்நாத் சிங் நம்பிக்கை

பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் தாவூத் இப்ராஹிம் கைது செய்யப்பட்டு விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் அப்பாவி மக்கள் 250க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 700க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த தொடர்குண்டு வெடிப்புகளுக்கு சதித்திட்டம் தீட்டியதாக தாவூத் இப்ராஹிம் மீது இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.



          


இந்நிலையில், இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில், ''பதான்கோட் விமானப்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை வரும் ஜனவரி மாதம் 2-ம் தேதி அளிக்கும்படி பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் ஒரு சர்வதேச பயங்கரவாதி. அவரைக் கைது செய்வதற்கு சர்வதேச அமைப்புகளின் உதவி அவசியப்படுகிறது. தாவூத் விரைவில் கைது செய்யப்படுவார். எந்தவித நிபந்தனையுமின்றி இந்தியாவுக்கு அவர் கொண்டு வரப்படுவார். தாவூத்துக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் இந்தியா அளித்துள்ளது என்றார் ராஜ்நாத் சிங்.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஐ.எஸ். அமைப்பை எதிர்க்கின்றனர். அதனால், அந்த அமைப்பால் இந்தியாவில் செல்வாக்கு பெற முடியாது. ஐ.எஸ். அமைப்பை இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் அனுமதிக்க மாட்டார்கள். கடந்த 2 ஆண்டுகளில் நாட்டில் உள்நாட்டுப் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நக்ஸலைட்டுகள், மாவோயிஸ்டுகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். இதை அதிகாரப்பூர்வ மற்றும் அதிகாரப்பூர்வமில்லாத தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.



No comments:

Post a Comment