Monetize Your Website or Blog

Monday, 23 May 2016

தொண்டர்களே... தற்கொலை வேண்டாம்..! -விஜயகாந்த் கோரிக்கை

அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம், அதற்கு தற்கொலை தீர்வாகாது. அதனால், தற்கொலை முயற்சியில் யாரும் எந்த காலத்திலும் ஈடுபட வேண்டாம் என்று விஜயகாந்த் தே.மு.தி.க. தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


          



தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில், அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. தி.மு.க. 98 இடங்களில் வெற்றி பெற்று பலமான எதிர்கட்சியாக அமைந்துள்ளது. ஆனால் இந்த தேர்தலில், தே.மு.தி.க., மக்கள் நல்க்கூட்டணி, த.மா.கா. கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது.

தே.மு.தி.க. தோல்வியை சந்தித்ததையடுத்து, மனமுடைந்த கடலூர் மாவட்டம் கொங்கராயனூர் கிளைக்கழக தே.மு.தி.க. செயலாளர் சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இதுபோன்ற தற்கொலை முயற்சியில் யாரும் எந்த காலத்திலும் ஈடுபடவேண்டாம்.

அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம், அதற்கு தற்கொலை தீர்வாகாது. தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றத்தை உருவாக்க தே.மு.தி.க. மூன்றாவது அணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள் வாக்களர்களுக்கு பணத்தை கொடுத்து பொய்யான வெற்றியை பெற்றிருக்கின்றன" என்று கூறி உள்ளார்.




No comments:

Post a Comment