அகர் மரம்(Agar tree,Agarwood) என்பது புதிய வகை மரம் அல்ல,நமது நாட்டில் பலஆண்டு காலமாக சித்த ,ஆயுர்வேத மருந்துகள் மற்றும் வாசனை பொருட்கள்தயாரிக்க உபயோகிக்க பட்டு வந்த மரம் தான்.ஆனால் தற்போது இந்த மரம் அழிந்துவரும் மர வகைகளில் வரிசையில் உள்ளது..இந்த மரத்தில் இருந்து தான் உலகிலேயேமிக அதிக மதிப்புடைய அகர் ஆயில் எடுக்க படுகிறது,ஒரு கிலோ ஆயில் இன் விலைஅதிக பட்சம ஒரு லட்சம் வரைக்கும் விற்க படுகிறது.ஒரு கிலோ மர கட்டையின்விலை 30000 இல் இருந்து 60000 ஆயிரம் வரைக்கும் விற்க படுகிறது.
இதன் நன்மைகள்
-------------------------------
1 . மிகவும் வேகமாக வளரகுடியது.
2 . சந்தன மரம் போல அல்லாமல் 7 அவது வருடத்தில் இருந்தே அறுவடைசெய்யலாம்.
3 . ஓரளவு வறட்சியை தாங்ககுடியது. ( ஆனால் மிக வறண்ட நிலங்களுக்கு அகர்உகந்தது அல்ல,வறண்ட நிலங்களுக்கு சந்தன மர சாகுபடி உகந்தது,சந்தன மரவளர்ப்பு கட்டுரையை பார்க்கவும்)
4 . உலக அளவில் அகர் மரங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது.
7 வருடம் நன்கு வளந்த ஒரு மரத்தில் முலம் 2 லட்சம் ருபாய் வரைக்கும் மிக எளிதாக பெறலாம்.3 மிட்டர்இடைவெளியில் ஏக்கருக்கு சுமார் 300 மர கன்றுகள் நடலாம்.பொதுவாக அகர் இந்தியாவில் அஸ்ஸாமில் அதிகமாக வளர்க்கபடுகிறது,தற்போது கர்நாடகாவில் அதிக விவாசாயிகள் அகர் வளர்ப்பில் ஆர்வம்காட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் சில தனியார் வேளாண்மை பண்ணைகள் , அகர் நாற்றுகள் மற்றும் தேவையானஉரங்களை வழங்கி ,அவர்களே நல்ல விலைக்கு மரங்களை வெட்டி கொள்கிறார்கள்...
அகர் வளர்ப்பு பிரச்சனைகள்
அகர் மரம் என்பது அதிக ஈர பதமுள்ள மலை பகுதிகளிலும்,125 முதல் 750 cm மழைபெய்யகூடிய பகுதிகளும் , நல்ல நீர் வளம் உள்ள வன பகுதிகளிலும் ,அதிகம் வெயில் இல்லாத பகுதிகளிலும் வளரகூடிய ஒரு மரம். அகர் மரம் பயிரிடப்படும் நிலப்பரப்பு கடல் நீர்மட்டத்தில் இருந்து 300 முதல் 1500 வரை உயரத்தில் இருக்க வேண்டும் என்பது முக்கியதேவைகளில் ஒன்று ஆனால் கடல் நீர் மட்டத்தில் இருந்து 20 அடி உயரமே உள்ள தென்மாவட்டங்களில் கூட,அகர் சாகுபடி வெற்றிகரமாக செய்யலாம் என்றும் அது அனைத்துபகுதிகளிலும் வளர கூடிய ஒரு அற்புத மரம் என்றும் ,10 மரம் வளர்த்தால் பணக்காரனாகி விடலாம் என்றும் ,ஏதோ லாட்டரி டிக்கெட் விற்பது போல சிலர் இங்கு விளம்பரபடுத்திகொண்டு இருக்கிறார்கள்.
அகர் மரம் வளர்ப்பை பற்றி உண்மை நிலையை அறிய நமது ப்ளாக் சார்பில் ,கர்நாடகாவில்உள்ள அகர் மர வளர்ப்பு ஊக்குவிப்பாளர் திரு கணபதி அவர்களை தொடர்பு கொண்டுவிசாரித்த போது அவர் அளித்த செய்திகளை இங்கு பதிவு செய்கிறேன்..
1 நன்கு குளிர்ந்த காலநிலை உள்ள கர்நாடக மாநிலத்திலேயே,ஒரு சில பகுதிகளில் அகர்மரம் வளர்க்க ஏற்ற காலநிலை இல்லை என்றும் மண் வளம் இல்லை என்றும் இவர்கூறுகிறார்.
2 விளம்பரங்களில் நீங்கள் பார்த்து இருக்கலாம், கட்டையின் விலை கிலோ ரூ 30000 என்றெல்லாம்,ஆனால் மரத்தை அறுவடை செய்யும் சமயத்தில் மரத்தின் நிறம்,மணம்,மரகட்டை நீரில் முழ்கும் தன்மை மற்றும் மரத்தின் அடர்த்தி போன்ற பலவற்றை கருத்தில்கொண்டே விலை நிர்ணயக்கபடும்.இது போன்ற தகவல்களை நாம் அந்த விளம்பரங்களில்பார்க்க முடியாது.
3 கர்நாடகாவில் ஒரு அகர் மரகன்றின் விலை 68 மட்டுமே,ஆனால் நாம் பார்க்கும் அல்லதுவிசாரித்த வரையில் தமிழகத்தில் கன்றின் விலை ரூ 350 .என்றே விற்பனை செய்துவருகிறது.
4 குறைவான நீர் வசதி போதுமானது என்பது முற்றிலும் தவறானது.
5 தென்னை பாக்கு மரங்களுக்கு மத்தியில் இதை நாம் ஊடுபயிராக வளர்க்க முடியும்.
6 விவசாய்களின் தங்கபயிர் ,ஒரு மரம் 7 வருடத்தில் 3 லட்சம் ருபாய்,ஒரு கிலோ ஆயில்20 லட்சம் என்பதெல்லாம் வியாபார வார்த்தைகள். தமிழகத்தில் இதை பயிரிட்டால்இவ்வளவு லாபம் கொழிக்கும் என்று தெரிந்தால், ஏன் தமிழ்நாடு வனதுறை இதில் ஆர்வம்காட்டவில்லை போன்றவற்றை சிந்திக்க வேண்டும் மக்களே!!
7 நினைத்து பாருங்கள் 6 அல்லது 7 வருடம் வளர்த்த பின் ,அறுவுடை சமயத்தில்மார்க்கெட் சரி இல்லை ,இந்த விலைக்கு தான் போகும் என்று அகர் மரம் வாங்கும்கம்பெனிகள் சொன்னால்,தனியாக அதை நாம் மார்க்கெட் செய்ய இயலுமா?
எனவே அகர் என்பது தமிழ்நாட்டின் சில இடங்களை தவிர மற்ற பகுதிகளில் பயிரிட தகுந்தபயிர் அல்ல, எனவே போலி விளம்பரங்களை கண்டு பேராசை கொண்டு ஏமாற வேண்டாம். அவர்கள் ஒரு மரகன்றுக்கு ரூ 350 வாங்கி கொண்டு மாயமாய்மறைந்துவிடுவார்கள், அவர்களுக்கு என்ன அவர்கள் மரகன்றுகள் விற்பனை செய்தாலேபோதிய லாபம் கிடைத்துவிடும்.
100 மர கன்றுகள் விற்றால் ரூ 35000 ,இதே கரநாடகாவில் 100 மரகன்றுகள் விலை 6800 . 100 மர கன்றுகள் விற்பதன் மூலம் சுமாரான லாபம் 25000 பார்த்து விடுவார்கள், பிறகுஉங்கள் மரம் வளர்ந்தால் அவர்களுக்கு என்ன ,வளர விட்டால் என்ன?நாம் தான்தினமும் மரம் வளர்கிறதா, வேர் விடுகிறதா என்று மண்ணை நோண்டி கொண்டே பொழுதை கழிக்க வேண்டும். பணம் உழைப்பு அனைத்தும் விரயம்.எனவே சிந்திபீர்செயல்படுவீர்...

"நிர்வாணத்தின் முதல் நிலை அகரின் சுகந்த நறுமணம் - புத்தர்" என்று சில அகர் மரவிளம்பரங்களில் பார்த்து இருப்பிர்கள்.இது போன்ற விளம்பரங்களை நம்பினால் இருக்கும்கோமணமும் பறந்து நாம் தான் நிர்வாண நிலையை அடைய வேண்டும். புத்தம் சரணம்கச்சாமீ...
அகர் பயிரிட விரும்பினால் ,மண்ணின் தன்மை , கால நிலை ,நீர் வளம் போன்றவற்றைகருத்தில் கொண்டு நன்கு ஆராய்ந்த பின் செயலில் இறங்கவும்.மேலும் அகர் பற்றியதகவல்கள் பெற இந்த பதிவுக்கு பின்னோட்டம் இடவும் ...

No comments:
Post a Comment