Monetize Your Website or Blog

Tuesday, 24 May 2016

ஜெ. பதவியேற்பு...ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலித்த ஆட்டோ டிரைவர்!

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பதையொட்டி, கோவையில் இன்று நாள் முழுவதும் சவாரிக்கு ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலித்தார் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர். 

கோவை, சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் மதிவாணன். ஆட்டோ ஓட்டுனரான இவர், அதிமுக விசுவாசி. கட்சியில் எந்த பொறுப்பில் இல்லாவிட்டாலும், அதிமுகவின் வெற்றியை தொடர்ச்சியாக கொண்டாடி வந்துள்ளார்.

அதன்படி கடந்த 19ம் தேதி அதிமுக வெற்றி அறிவிப்பு வெளிவந்ததும், பட்டாசு வெடித்து கொண்டாடிய மதிவாணன், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றதையொட்டி, இன்று காலை 6 மணி முதல் அனைவருக்கும் ரூ.1 கட்டணத்தில் ஆட்டோவை இயக்கினார்.

மாநகரில் எங்கு ஏறி இறங்கினாலும் பயணிகள் ஒருவருக்கு தலா ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறுவதாக அறிவித்தார். அதன்படி இன்று காலை 6 மணி முதல் ஒரு பயணிக்கு ஒரு ரூபாய் வீதம் கட்டணம் வசூலித்தார்.

இது தொடர்பாக மதிவாணனிடம் பேசினோம். "நான் அதிமுகவின் விசுவாசி. அதிமுகவின் வெற்றியை தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறேன். கடந்த 19 ம் தேதி அதிமுக வென்றபோது லட்டு கொடுத்து கொண்டாடினோம். அதைப்போலத்தான் இதுவும். இன்று நாள் முழுவதும் 102 பயணிகள் ஆட்டோவில் பயணித்துள்ளனர். அவர்களிடம் தலா ஒரு ரூபாய் வீதம் 102 ரூபாய் தான் கட்டணமாக பெற்றேன்.



இன்று பகல்வரையில் 150 கி.மீ. தூரம் பயணித்துள்ளேன். எனக்கு பிடித்தமான தலைவி பதவியேற்பதால் என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவே இப்படிசெய்தேன்.மற்றபடி இதனால் யாரிடமும் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்கவில்லை. இது ஒரு கொண்டாட்டம். மக்களுக்கு பயனளிக்கும் வகையிலான ஒரு கொண்டாட்டம் அவ்வளவு தான்," என்றார்.


No comments:

Post a Comment