நடந்து முடிந்த 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.
தமிழகத்தின் 234 தொகுதிகளில், விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக-தமாகா-மக்கள் நலக் கூட்டணி பெரிய எதிர்பார்ப்போடு களம் இறங்கியது.ஆனால்,தேர்தல் முடிவுகள் அந்தக் கூட்டணியின் எதிர்பார்ப்பைத் தூள் தூளாக்கியது. முடிவுகள் அறிவிக்கப்பட்ட 232 தொகுதிகளில் 134 தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது அதிமுக. 98 இடங்களில் வென்று தமிழகத்தின் பிரதான எதிர்க் கட்சியாக திமுக வலுப்பெற்றுள்ளது.

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தான் போட்டியிட்ட உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் டெபாசிட் கூட வாங்காமல் படுதோல்வியை சந்தித்த போதிலும் ,சோர்ந்து விடாமல் மீண்டும் பரபரப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டார்.
அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில்,"நமது வெற்றி தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது... யாரும் மனம் தளரவேண்டாம்.
நாம் ஆட்சியமைப்பது உறுதி! " என்று பதிவிட்டு அவரின் புதிய போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

மேலும் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக நடித்துவரும் புதிய திரைப்படமான 'தமிழன் என்று சொல்' படத்தில் விஜயகாந்துக்கு முக்கியமான பாத்திரம் என்பதால், அதில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். தேர்தல் முடிந்த நிலையில், விஜயகாந்த் தனது குடும்பத்தோடு வெளிநாடு 'டூர்' சென்றுவிடுவார் என்று பரவிய வதந்திகளுக்கு இதன் மூலம் முற்றுப் புள்ளிவைத்துவிட்டார்.
'தமிழன் என்று சொல்' என்ற படத்தில் விஜயகாந்த் தமிழகத்தின் முதல்வராக நடிக்கிறார் என்றும், பல்வேறு அரசியல் 'பஞ்ச்' வசனங்கள் அதில் இடம்பெறும் என்றும் அவரின் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

No comments:
Post a Comment