இன்ஜினியரிங் படித்துவிட்டு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும். அதில் வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட மாணவர்களுக்காக மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்புதான் லக்ஷ்யா.
ஆண்டு முழுவதும் பல நிகழ்வுகள் நடத்தி எப்போதும் ஆக்டிவாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது லக்ஷ்யா. "வைபவ்" என்ற பெயரில் பல நிகழ்ச்சிகளை வைபவமாக நடத்துகிறார்கள் மாணவர்கள். இந்த மாணவர்கள் படித்து முடித்துவிட்டு, சுயமாக தொழிலை தொடங்கி அதில் வெற்றி பெற கல்லூரியில் படிக்கும்போதே லக்ஷ்யா மூலமாக என்னவெல்லாம் செய்கிறார்கள் தெரியுமா?
1. சைக்கான் (SYCON - SSN Youth Conference)
1. சைக்கான் (SYCON - SSN Youth Conference)
இது ஒரு நாள் முழுவதும் நடக்கும் நிகழ்வு. மாணவர்களிடம் சுய தொழிலில் வெற்றி கண்ட ஜாம்பவான்கள் பலர் வந்து தங்கள் அனுபவம், தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து பகிர்வார்கள்.
மேலும் மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விடையளித்து, தொழிலில் என்னவெல்லாம் செய்ய வேண்டும், எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறுவார்கள். சுய தொழில் தொடங்க வேண்டும் என்று ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இது மிகப்பெரிய குளுகோஸ் என்கிறார்கள் மாணவர்கள்.
2. வால் ஸ்ட்ரீட் க்ளப் (WALL STREET CLUB)
2. வால் ஸ்ட்ரீட் க்ளப் (WALL STREET CLUB)
பங்குச்சந்தை, லாபம், விற்பனை போன்ற பல அம்சங்கள் இங்கு சொல்லித்தரபடுகின்றன. குழு விவாதம் மூலம் மாணவர்களே பலவற்றை விவாதித்து அறிகின்றனர். இவற்றை பற்றி பயிற்சியும் வழங்கப்படுகின்றன. பின்னாளில் சுயமாக ஒரு கம்பெனி தொடங்க இது உதவும் என்கின்றனர் ஒருங்கிணைப்பாளர்கள்.
3. 32 ஹவர் செலஞ்ச் (32 HOUR CHALLENGE)
இது ஒரு போட்டி. மாணவர்களை 3 அல்லது 4 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து அவர்களுக்கு 32 மணி நேரம் அவகாசமும் கொடுக்கப்படுகிறது. அதற்குள் அவர்கள் சொந்தமாக ஒரு ஸ்டார்ட் அப் ஐடியா, அதற்கான வலைதளம், செயலி, பிற யுத்திகளை செய்து முடித்து முழு திட்டத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

எவருடையது குறைந்த செலவு, அதிக லாபம், அமல்படுத்தக்கூடிய அவர் வெற்றி பெற்றவர் ஆவார். மேலும் அந்த குழுவிற்கு அவர்கள் குறிப்பிட்ட ஸ்டார்ட் அப்பை தொடங்க உதவியும் அளிக்கப்படுகிறது. ஒரு தொழில் தொடங்குவதில் சந்திக்கும் சிக்கல்கள், கையாள வேண்டிய யுக்திகளை இந்த நிகழ்வு கற்றுத்தருகிறது.
4. ஷார்க் டேன்க்
4. ஷார்க் டேன்க்
அமெரிக்க தொலைகாட்சி நிகழ்ச்சியான ஷார்க் டென்க்கின் வழியில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி இது. முதல் சுற்று பிசினஸ் சம்பந்தப்பட்ட வினாடி வினா. இரண்டாம் சுற்றில் தன்னுடைய பிசினஸ் ப்ரேசெண்டேஷனை விளக்க வேண்டும்.
அதில் வரும் லாபம், கையாளும் விளம்பர யுக்திகள், செலவுகளை சமாளிக்கும் வழிகள் என ஒருவருக்கு கொடுக்கப்படும் பிசினஸ்க்கு அனைத்தையும் கணித்து விளக்க வேண்டும். எவருடையது சிறந்ததாக இருக்கிறதோ அவருடையது ஏற்றுக்கொள்ளப்படும். இதுவும் தொழில் முனைய ஏற்படும் சிக்கல்களை களைவதற்கான பயிற்சியே!
5. உஜாடே
5. உஜாடே
இது ஒரு ட்ரெஷர் ஹண்ட் போன்ற விளையாட்டுதான். பார்க்க பொழுதுபோக்கு விளையாட்டு போல் இருந்தாலும் உள்ளே பல அம்சங்கள் கொண்டது. சென்னை முழுவதும் ஒரு நாள் சுற்றி திரிந்து புதையலை கண்டு பிடிக்க வேண்டும். வழியில் பல நிலைகளை கடக்க வேண்டும்.

உதாரனத்திற்க்கு ஒரு க்ளூ டீக்கடைக்காரரிடம் இருந்தால் அவருக்கு 100 ரூபாய்க்கு வியாபாரம் செய்து கொடுத்தால்தான் அவர் அதை கொடுப்பார். போட்டி என்பதால் அதி விரைவாக மாணவர்கள் எப்படி வியாபாரம் செய்வது என்று யோசிப்பார்கள். இப்படிதான் ஒவ்வொரு நிலையும் இருக்கும். போட்டி முடிவில் மாணவர்களுக்கு கிடைப்பது பிசினஸ் அனுபவம் என்கிற பெரிய புதையலே!
6. மேளா
6. மேளா
இதுதான் லக்ஷியாவின் மிகப்பெரிய நிகழ்வு. மாணவர்கள் அதிகபட்சம் மூவர் ஒரு அணியில் என்று அணிகளை பிரித்துக்கொள்வார்கள். ஒரு நாள் முழுவதும் கல அவகாசம் கொடுக்கப்படும். 300 ரூபாய் அதிகபட்ச முதலீடாக இருக்க வேண்டும்.
நாள் இறுதியில் யார் அதிகமாக சம்பாதிக்கிறார்களோ அவர்கள்தான் வின்னர். ஒரு நாளின் 300 ருபாய் முதலீட்டில் மாணவர்களால் 5,000 வரை ஈட்ட முடியும் என்று நம்பிக்கை கொடுக்கிறது இந்த மேளா. பேல் பூரி, க்வில்லிங் தோடுகள் என்று என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்து விளம்பரப்படுத்தி விற்று வெல்கிறார்கள் மாணவர்கள்.
டீச் எ ஸ்கூல்
டீச் எ ஸ்கூல்
இப்படி போட்டிகள் நடத்தி, கிடைக்கும் லாபத்தை அருகிலுள்ள அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்றவற்றை கற்றுக்கொடுத்து செலவழிக்கின்றனர் இந்த மாணவர்கள். மேலும் 5 பள்ளிகளுக்கு மின்விளக்கு வசதியும் எற்படுதிக்கொடுதுள்ளனர். லக்ஷ்யா - எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரியின் மாணவர் தொழில் முனைவோர் முன்னேற்ற சங்கம் இது.


இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து நடத்துவது மாணவர்கள் மட்டுமே. இது மட்டும் இல்லாமல் லக்ஷியாவை சேர்ந்த மாணவர்கள் பலர் இப்போதே ஸ்டார்ட் அப் தொடங்கி லாபம் ஈட்டி வருகிறார்கள். படிப்பு முடித்தவுடன் சுயமாக தொழில் தொடங்க இந்த 4 ஆண்டு அனுபவம் நிச்சயம் கை கொடுக்கும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் மாணவர்கள்!

No comments:
Post a Comment