Monetize Your Website or Blog

Tuesday, 24 May 2016

12 வயதுக்குள் 3 பட்டங்கள்... 18 வயதிலேயே டாக்டராக விருப்பம்!

12 வயதுக்குள் 3 பட்டங்கள் பெற்று சாதனைபடைத்துள்ள சிறுவன், தனது 18 வயதில் டாக்டராக விருப்பம் தெரிவித்து உள்ளார்.

பிறப்பிலேயே அசாத்திய திறமைகளை பெற்று ஒருசிலர் அதிபுத்திசாலியாக விளங்குவர். அந்த வரிசையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்துக்கு உட்பட்ட சக்ரமென்டோவில் வசித்து வரும் தனிஷ்க் ஆபிரகாம் என்ற 12 வயது சிறுவன் இடம் பிடித்துள்ளார். 12 வயதில் பல பட்டப் படிப்புகளை முடித்துள்ள தனிஷ்க் ஆபிரகாம், 18 வயதில் மருத்துவர் ஆவதே எனது லட்சியம் என்கிறார். பிஜு ஆபிரகாம்-தஜி ஆபிரகாம் என்ற சிறுவனின் பெற்றோர், கேரளாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து அங்கேயே செல்டில் ஆனவர்கள்.



           

தனிஷ்க் ஆபிரகாம் குழந்தையாக இருந்த போதே, மிகுந்த அறிவு மற்றும் திறமையுடன் இருந்ததால் அவரது பெற்றோர், அமெரிக்காவின் சிறந்த கல்விமான்களை உறுப்பினர்களாக கொண்ட மிக முக்கிய திறன் மையமான ‘மென்சா’வில் 4 வயதிலேயே அவரை சேர்த்து விட்டனர். ஆபிரகாமுக்கு 7 வயது முடிவடைவதற்குள், வீட்டிலேயே பள்ளிக்கல்வியை கற்பித்து விட்டனர். இதனால் அவர், 2014-ம் ஆண்டு அதாவது, தனது 10-வது வயதிலேயே மாநில தேர்வு எழுதி உயர்நிலைப் பள்ளி டிப்ளமோவுக்கு இணையான பட்டம் பெற்று விட்டார்.

தனிஷ்க் தனது 7 வயதிலே கல்லூரியில் சேர்ந்து படிக்க துவங்கினார். ஆம்பிரகாமின் வயது காரணமாக பேராசிரியர்கள், வகுப்பில் சேர்க்கவில்லை. கால்நடை மருத்துவரான அவனது அம்மாவுடன் வகுப்புக்கு வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் வகுப்பில் சேர்த்துக் கொண்டார்கள். மேலும் வகுப்பில் பல்வேறு வகையான வித்தியாசமான கேள்விகளை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பார் என்று ஆபிரகாமின் பேராசியர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதன்பின், ரிவர் கல்லூரியில் பொது அறிவியல், கணிதம், இயற்பியல் மற்றும் வெளிநாட்டு மொழிக்கல்வி ஆகிய 3 பாடத்திலும் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில், 11 வயதிலேயே பட்டதாரியான தனிஷ்க்கின் அபார சாதனை ஜனாதிபதி ஒபாமாவின் கவனத்தை ஈர்த்தது. இதைத்தொடர்ந்து அவர் தனிஷ்க்குக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து கடிதம் அனுப்பி இருக்கிறார்.

தற்போது தனிஷ்க் மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பித்து உள்ளார். அவருக்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் டேவிஸ் மற்றும் சாந்தா குரூஸ் கிளைகளில் சேர்ந்து படிக்க அழைப்பு வந்துள்ளது. எதில் சேர்ந்து படிப்பது என்று இன்னும் தனிஷ்க் முடிவு செய்யவில்லையாம். இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள தனிஷ்க், ''என்னுடைய 18-வது வயதில் நான் எம்.டி. (மருத்துவம்) படிப்பை நிறைவு செய்து டாக்டராவேன் என நினைக்கிறேன்.



நானும் சாதாரண குழந்தைகளை போலத்தான் வீடியோ கேம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவேன். ஆனால், எதையாவது கற்றுக்கொள்ள விரும்புவேன். நான் சிறுவன் என்பதால், கல்லூரியில் நிறைய பேராசிரியர்கள் என்னை தங்கள் வகுப்பில் சேர்க்க விரும்பவில்லை. எதிர்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஆக விரும்புகிறேன்" என்று கூறி உள்ளார்.


No comments:

Post a Comment