Monetize Your Website or Blog

Friday, 27 May 2016

கண்ணீர் விட்டு அழுத சியர் லீடர்ஸ்! இது ஐ.பி.எல் அதிசயம்!

“அவங்கெல்லாம் காசுக்காக ஆடுறாங்க. அவங்களால கிரிக்கெட்டுக்கு அசிங்கம்” இப்படித்தான் ஏகம் பேர் கூறினார்கள், டி20 போட்டிகளில் உற்சாக நடனமாடும் பெண்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது. நம் ஐ.பி.எல் போட்டிகளில் அவர்கள் ஒரு அங்கமாகவே மாறிவிட்டாலும் அவர்களை வெறும் நடனம் ஆடும் பொம்மைகளாகவே பார்த்தனர் பலர். ஆனால் நேற்று இரவு நடந்த அச்சம்பவம் நம் அனைவரையும் ஒரு நிமிடம் உரையவைத்தது. “கிரிக்கெட்டிற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?” என இனி ஒருவரும் கேட்க முடியாது. ஆம், நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியிடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தோற்று விட, அவ்வணியின் சீயர் கேர்ள்ஸ் இருவர் கண்ணீர் சிந்திய காட்சி அவர்கள் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.



இதுவரை இப்படியொரு காட்சி ஐ.பி.எல் லின் ஒன்பது ஆண்டு கால வரலாற்றில் நிகழ்ந்தது இல்லை. ஒவ்வொரு அணியின் சீயர்லீடர்சும் அவர்கள் அணி சிக்சர் அடிக்கும் போதும், விக்கெட் வீழ்த்தும் போதும் உற்சாகமாக ஆடுவார்கள். ஆட்டத்தில் வென்ற பிறகு இரண்டு மடங்காக அவ்வுற்சாகம் அதிகரிக்கும். தோற்றாலும் சிரித்துக்கொண்டே ரசிகர்களையும் கேமராவையும் பார்த்து சிரித்துவிடுச் சென்றுவிடுவார்கள். ஆனால் கே.கே.ஆரின் அந்த மூன்று சீயர் லீடர்களும் புவனேஷ் அந்த கடைசிப் பந்தை வீசியதும், உற்சாகமூட்டவேண்டும் என்ற தங்கள் கடமையையும் மறந்து கண்ணீர் சிந்தி சோகம் படரச்செய்தார்கள். அவுட் ஆகி பெவிலியன் வந்த பின்னர் கேப்டன் கவுதம் கம்பீர் சென்டிமென்டாக எப்போதுமே பேடுகளைக் கழட்ட மாட்டார். ஆனால் நேற்று அவரே ஜீரணித்துக்கொண்டு ஐந்து பந்துகள் இருக்கும்போதே அனைத்தையும் களைத்து  தோல்வியை ஏற்க தயாராகியிருந்தார். ஆனால் வெவ்வேறு நாட்டைச் சார்ந்த இப்பெண்கள், அனைவரும் சாடியது போல் கிரிக்கெட்டிற்குச் சம்பந்தம் இல்லாத பெண்கள், எந்த வகையிலும் வங்க மண்ணைப் பற்றி அறிந்திடாத அப்பெண்களால் அத்தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
Always wish my KKR boys the best and never said anything to the girls who bring so much cheer. Lov u girls & thanx


இவ்விளையாட்டு ஒரு ரசிகரை எந்த அளவிற்கு ஆளும் என்பதற்கு இதைவிட வேறு எந்த நல்ல எடுத்துக்காட்டும் தேவையில்லை. கொல்கத்தா அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர்களுக்கான சம்பளம் ஒரு போட்டிக்கு 6000 முதல் 12000 வரை. அவர்களின் அணி போட்டியை வென்றால் 3000 ரூபாய் போனஸ். நேற்றைய தோல்வியால் அவர்களுக்கு போனஸ் கிடைக்காது தான். ஆனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் அன்பையும் பெற்று விட்டனர் அவ்விரு மங்கைகள். அணியின் உரிமையாளர் ஷாரூக் கூட தன் டுவிட்டர் பக்கத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 



அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்களான டுவிட்டரிலும் ஃபேஸ்புக்கிலும், ரசிகர்களும் வீரர்களும் அப்பெண்களைப் பாராட்டி வருகின்றனர். உங்களுக்காகவாவது அடுத்த சீசன்ல கம்பீர் அண்ட் கோ ஜெயிக்கட்டும்!




No comments:

Post a Comment