சசிகலாவின் சொந்த மாவட்டம் திருவாரூர். சசிகலாவின் வகையறாக்கள் அனைவரும் திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவி இருக்கிறார்கள். சசிகலாவின் சகோதரர் திவாகரன் மன்னார்குடியில் வசிக்கிறார். கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் தி.மு.க சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன் ராஜா போட்டியிட்டு ஜெயித்தார். அவரை இந்தமுறை தேர்தலில் தோற்கடித்து மன்னார்குடியை அ.தி.மு.கவின் கோட்டை என்று பிரகடனப்படுத்தும் வகையில், சவாலுடன் திரைமறைவு தேர்தல் வேலைகளில் இறங்கினார் திவாகரன். இவரின் சவாலை எதிர்கொள்ளும் வகையில் டி.ஆர்.பாலுவே தனது மகனுக்காக தேர்தல் களத்தில் குதித்தார். ஜெயிக்கப்போவது யார்? என்கிற போட்டி கடுமையாக நிலவியது. சசிகலாவின் பூர்வீகமான திருத்துறைப்பூண்டி, அவரின் சகோதரர் திவாகரன் வசிக்கும் மன்னார்குடி ஆகிய தொகுதிகள் மற்றும் திருவாரூர் தொகுதியில் தி.மு.க வெற்றி பெற்றது. கடைசியில் டி.ஆர்.பாலுவின் தேர்தல் வியூகத்தில் திவாகரன் தோல்வி அடைந்தார். இதைக் கேள்விப்பட்ட சசிகலா கடுங்கோபத்தில் இருக்கிறாராம். திருவாரூர் மாவட்டம் ஏன் கை நழுவியது என்று ரகசிய விசாரணையில் சசிகலா இறங்கியிருக்கிறாராம்.
இதுபற்றி விவரம்...
அ.தி.மு.க சார்பில் மன்னார்குடி தொகுதியில் முதலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை திடீரென மாற்றி திவாகரனின் முக்கிய ஆதரவாளரான எஸ்.காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். முதலில் அறிவிக்கப்பட்ட சுதா, மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ஆர்.காமராஜின் தீவிர விசுவாசி. மன்னார்குடியை பூர்வீகமாக கொண்டவர் ஆர்.காமராஜ். இவர்தான், கடந்த 15 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். கொஞ்ச காலத்துக்கு முன்பு, திவாகரனின் சிஷ்யராக வலம் வந்த ஆர்.காமராஜ், சசிகலா குடும்பத்தினர் மீது ஜெயலலிதா கடும் நடவடிக்கை எடுத்த பிறகு, டிராக் மாறினார். திவாகரனைப் பற்றி ஆட்சி மேலிடத்துக்கு பல தகவல்களை ஆர்.காமராஜ் கோஷ்டியினர் போட்டுக்கொடுத்தனர். திவாகரனின் ஆதரவாளர்கள் 50 பேர்களை ஜெயலலிதாவிடம் கோள்மூட்டி கட்சியிலிருந்து நீக்க வைத்தனர். அந்த வகையில், சசிகலா குடும்பத்தினர் பற்றிய நடவடிக்கைகளை ஆட்சி மேலிடத்து போட்டு கொடுக்கும் சேனலாகவே அமைச்சர் காமராஜ் தரப்பு மாறிவிட்டது.
மன்னார்குடியைப் பொறுத்தவரையில், திவாகரனுக்கு வைக்கப்பட்ட 'செக்'. வளர்த்த கடாவே மார்பில் பாய்ந்த கதையாய் திவாகரனுக்கு எதிராகவே ஆர்.காமராஜ் மாறிவிட்டார் என்றே திவாகரனின் ஆதரவாளர்கள் வெளிப்படையாக குற்றம்சாட்டினார்கள். இப்படியாக, திருவாரூர் மாவட்டத்தில் ஆர்.காமராஜ் கோஷ்டி தனியாகவும், திவாகரன் கோஷ்டி தனியாகவும் அரசியல் நடத்தி வந்தனர். ஒருகட்டத்தில், ஆர். காமராஜை அமைச்சர் பதவியில் இருந்து தூக்க திவாகரன் தரப்பில் அரசியல் மூவ் நடந்தது. ஆனால், முடியவில்லை. இந்த சூழ்நிலையில்தான், தேர்தல் குறுக்கிட்டது.
திவாகரன் சிபாரிசில் சசிகலா தலையிட்டு எஸ்.காமராஜுக்கு சீட்டு கிடைத்தது. இதைக்கண்டு கடுப்பான அமைச்சரின் ஆதரவாளர்களும், கட்சியின் நிர்வாகிகள் பலரும் மன்னார்குடியில் போட்டியிட்ட எஸ்.காமராஜுக்கு தேர்தல் வேலை சரிவர செய்யாமல் கேமராக்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு, அப்படியே ஒதுங்கி, அமைச்சர் போட்டியிட்ட நன்னிலம் தொகுதிகளில் தேர்தல் வேலை பார்க்கச் சென்றுவிட்டார்கள்' என்று தேர்தல் நேரத்தில் பிரச்னையை கிளப்பினர் திவாகரன் ஆதரவாளர்கள். ஆனால், திவாகரன் தரப்பில், 'இதுபற்றி ஜெயலலிதாவிடம் யாரும் புகார் செய்யவேண்டாம். எப்படியாவது ஜெயிக்கிற வேலையை பாருங்கள்' என்று அட்வைஸ் செய்தாராம். அதன்படி, திவாகரனின் ஆதரவாளர்கள் எஸ்.காமராஜுக்காக களத்தில் வேலை பார்த்தனர். முக்கிய பிரமுகர்கள் பம்பரமாக வலம் வந்தனர். தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்தது.

திருவாரூர் மாவட்டத்தின் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் மூன்றில் தி.மு.க வெற்றி. ஒன்றில் மட்டுமே அ.தி.மு.க வெற்றி. திருவாரூரில் போட்டியிட்ட தி.மு.க தலைவர் கருணாநிதி, சுமார் 68 ஆயிரம் ஒட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்ததோடு, தமிழகத்திலேயே அதிக ஓட்டில் ஜெயித்தவர் என்கிற முதலிடத்தை பிடித்தார். திருத்துறைப்பூண்டியில் தி.மு.க வேட்பாளர் ஆடலரசன், சுமார் 13 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்திலும், மன்னார்குடியில் தி.மு.க வேட்பாளர் ராஜா, சுமார் 9 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்திலும் ஜெயித்தனர். நன்னிலத்தில் ஆர்.காமராஜ், சுமார் 21 ஆயிரம் ஒட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார். மூன்று தொகுதியை கோட்டை விட்டவர் ஆர்.காமராஜ் என்றாலும், அவருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கிடைத்தது. கடந்த ஆட்சியில் வகித்த அதே உணவுத்துறையும் கிடைத்தது. இதனால், திவாகரன் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார். மன்னார்குடியில் நடந்த தேர்தல் தகிடுதத்தங்களை விரிவாக திவாகரன் தரப்பினர் ஜெயலலிதாவுக்கு புகாராக அனுப்பினர். மன்னார்குடி, நீடாமங்கலம் ஏரியாவில் உள்ள ஒன்றியச் செயலாளர்கள் நால்வரின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் தேர்தல் வேலை செய்யாதது பற்றி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
முதலில், திவாகரனின் ஆதரவாளர் ஒருவரிடம் பேசினோம்...
"மன்னார்குடி ஏரியாவில் அ.தி.மு.கவை விட தி.மு.க 4,800 ஓட்டுகள் கூடுதலாக பெற்றது. திவாகரனின் சொந்தக் கிராமமான சுந்தரக்கோட்டையில் அ.தி.மு.கவை விட 214 ஒட்டுக்கள் தி.மு.கவுக்கு கூடுதலாக கிடைத்தன. அமைச்சர் ஆர்.காமராஜின் சொந்தக் கிராமம் எளவனூர். அங்கே அ.தி.மு.க 58 ஓட்டுகள் மைனஸ். அதேபோல், அமைச்சரின் முக்கிய தளபதியாக வலம் வரும் அவரின் அக்கா மகன் குமாரின் சொந்த ஊர் மேலநத்தம். அங்கேயும், அ.தி.மு.க.வை விட கூடுதலாக 180 ஓட்டுகளை தி.மு.க பெற்றது. இதேபோல், முதலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் சுதா குடியிருக்கும் வார்டிலும் 61 ஓட்டுகள் அ.தி.மு.க குறைவாகவே பெற்றது. இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம் அமைச்சர் தரப்பினர் எந்த அளவுக்கு தேர்தல் வேலை பார்த்திருக்கிறார்கள் என்று" என்கிறார்.
அடுத்து, அமைச்சரின் ஆதரவாளர்களிடம் பேசியபோது, "எஸ்.காமராஜ் ஜெயித்திருந்தால், அவர் திவாகரனின் நிழல் மனிதராகவே செயல்படுவார். அதை கட்சிக்காரர்களும், பொதுமக்களும் விரும்பவில்லை. அவர்களின் ஆட்டம் மன்னார்குடி தாங்காது" என்கின்றனர்.
தேர்தல் ரிசல்டுக்குப் பிறகு, அமைச்சர் ஆர்.காமராஜின் ஆதரவாளர்களும், திவாகரனின் ஆதரவாளர்களும் ஆங்காங்கே மோதலில் இறங்கிவிட்டனர். மன்னார்குடி நகரில் கடந்த சில நாட்களில், ஆட்டோ எரிப்பு, சோடா பாட்டில் வீச்சு, காரை அடித்து உடைத்தல், வீடு புகுந்து தாக்குதல் சம்பவம்... என்று பல வன்முறை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இவை பற்றி போலீஸுக்கு தகவல் சென்றும் மௌனமாக இருக்கிறார்கள்.
அடுத்த மாதம் நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலில் திவாகரனின் ஆசியுடன் எஸ்.காமராஜ் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லி வருகிறார்கள்.

No comments:
Post a Comment