வெகு விரைவில் ஜாம்ஷெட்பூர் (Jamshedpur), கழிவுநீர் சுத்திகரிப்பிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் தலைசிறந்த நகரமாக புகழ்பெறப் போகிறது. ஆம்.., ஜாம்ஷெட்பூர் நிர்வாகம் ஒரு மிகப் பெரிய கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை நிறுவிக் கொண்டிருக்கிறது. நகரத்தின் மொத்த கழிவுகளையும் சுத்திகரித்து, மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை தொழிற்சாலைகளுக்கு தரப்போகிறது இந்த ஆலை.
இதனால் இரண்டு பயன்கள் ஏற்படப்போகின்றன. இனி, கழிவுநீர் சுத்தமான நீர்நிலைகளையோ, கடலையோ, நிலத்தையோ மாசுபடுத்தாது. தொழிற்சாலைகளுக்கு அதிகளவு தண்ணீரை வழங்குவதுடன், இயற்கைக் கும் மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கு தேவைக்குறைவு இன்றி வழங்க முடியும். ஆக, ஒரே கல்லில் இரு மாங்காய்கள்!
TATA steel நிறுவனத்தின் துணை நிறுவனமான JUSCO வின் (Jamshedpur Utilities and Services Company- Jamshedpur) முயற்சியால் பாராவில்(Bara), நிறுவப்பட்டுவரும் இந்த சுத்திகரிப்பு ஆலை நிறுவனம் ஏற்கெனவே 2015ல், ஜாம்ஷெட்பூர் சாலைகளில், பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி சாலைகள் அமைத்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த கழிவுநீர் ஆலை, சுமார் 30 மில்லியன் லிட்டர் நீரைச் சுத்திகரிக்கும் திறன் படைத்தது என்கிறார்கள் JUSCO நிறுவன அதிகாரிகள்.
ஏற்கெனவே நிர்மாணிக்கக்கப்பட்ட Biatupur சுத்திகரிப்பு ஆலையைச் சேர்த்து,மொத்தமாக 40 மில்லியன் லிட்டர் நீரைச் இனி சுத்திகரிக்கலாம். இது, ஜாம்ஷெட்பூரில் உள்ள மொத்த கழிவுநீரைச் சுத்திகரிக்க போதுதமானதாகும். இந்த சுத்திகரிப்பு ஆலைகள் ZLD (Zero Liquid Discharge) என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. அதிநவீன, மேம்படுத்தப்பட்ட அறிவியல் தொழில்நுட்பம் இது. கிட்டத்தட்ட அனைத்து கழிவுநீரையும் மறுசுழற்சி செய்து சுத்திகரிக்கும் செயல்முறை.

அதாவது, கழிவுநீரில் உள்ள திடக்கழிவுகளை சிறிதாக மாற்ற, Ultra filtration மற்றும் Reverse osmosis ஆகிய இரண்டிற்கும் அந்த நீர் உட்படுத்தப்படுகிறது. இந்த நீர், பிறகு கொதிக்கும் நிலைக்கு (ஆவியாகும் நிலை) கொண்டுசெல்லப்பட்டு, அதில் கலந்திருந்த திடக் கழிவுகள் அகற்றப் படுகின்றன. இப்படி ஆவியான நீர், condense செய்யப்பட்டு, சுத்திகரிக்கப்படுகிறது. இப்படி பல நிலைகளில் சுத்தம் செய்யப்பட்ட நீர் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும்.
தனிநபர் நீர் நுகர்வில் ஜாம்ஷெட்பூர் இந்திய அளவில் நான்காவது இடத்தில் இருப்பதாககூறப்படுகிற நிலையில் இந்த சுத்திகரிப்பு ஆலை எதிர்காலத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் ஜாம்ஷெட்பூரை தலைசிறந்த நகரமாக மாற்றப்போகிறது.

இத்திட்டத்திற்கான பணிகள் 2017ன் ஆம் ஆண்டின் முற்பகுதியிலேயே முடிவடையும். JUSCOவின் இதுபோன்ற சுற்றுச்சூழல் சார்ந்த செயல்கள் பாராட்டப்பட வேண்டியவை. ஆனால் பாராட்டுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் கையோடு, நம் மாநிலத்திலும் இத்திட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளலாமே!

No comments:
Post a Comment