Monetize Your Website or Blog

Wednesday, 25 May 2016

10-ம் வகுப்பு தேர்வு: முதலிடம் பிடித்த விவசாயி மகளின் டாக்டர் கனவு!

10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற இரண்டு பேரில் ஒருவரான  மாணவி பிரேமசுதா, விவசாயியின் மகளாவார். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே பாடத்திட்டம் என்பதால், 10ம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரத்து 185 மாணவ, மாணவியர் எழுதினர். இவர்களை தவிர 48 ஆயிரத்து 564 பேர் தனித் தேர்வர்களாகவும் எழுதி இருந்தனர்.  


                         

இந்நிலையில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் பெரியவள்ளிக்குளம் நோபல் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த சிவக்குமாரும், நாமக்கல் மாவட்டம் எஸ்.ஆர்.வி.எக்ஸல் பள்ளியை சேர்ந்த பிரேம சுதாவும் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளனர். 

முதலிடம் பெற்ற பிரேமசுதாவிடம் முதலிடம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு பேசினோம். 

“காலையில இருந்து நிறைய வாழ்த்துகள். ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா, இன்னைக்குனு பார்த்து எனக்கு உடம்பு சரியில்லை. சந்தோஷத்தை கொண்டாட முடியலை. அதுதான் வருத்தமாக இருக்கு. எனக்கு சொந்த ஊரு திண்டுக்கல் மாவட்டம் காமாட்சியூர். எங்க அப்பா ஒரு சாதாரண விவசாயிதான். ஆனால் எங்க சித்தப்பா ஒரு டாக்டர். அவரை டாக்டருக்கு படிக்க வச்சது எங்க அப்பாதான். அந்த நன்றியை மறக்காம எங்க சித்தப்பா என்ன படிக்க வைக்கிறார். எல்லா செலவும் அவர்தான் செய்கிறார். அவர் நம்பிக்கையை காப்பாத்திட்டேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஸ்கூல்ல நடத்துறத நல்லா கவனிப்பேன் அவ்வளவுதான். தினமும் பள்ளியில் நடத்தும் பாடங்களை அன்றே முடித்துவிடுவேன். ஸ்பெஷலா எதுவும் பண்ணலை. எங்க சித்தப்பா மாதிரி நானும் டாக்டராகணும் அதுதான் என் கனவு" என நம்பிக்கை மிளிர பேசினார்




No comments:

Post a Comment