Monetize Your Website or Blog

Tuesday, 24 May 2016

மது குடிக்க லைசென்ஸ் கொடுப்பாரா முதல்வர் ஜெயலலிதா? -மக்கள் நலக் கோரிக்கை

500 டாஸ்மாக் கடைகள் மூடல், மதுக்கடைகளின் நேரம் குறைப்பு போன்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்புகளுக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. கட்சி வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரும் முதல்வரின் உத்தரவை வரவேற்றுள்ளனர்

 

" புதிய அரசு பொறுப்பேற்றவுடன் டாஸ்மாக் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை வரவேற்கிறோம். ஆனால், இதையொட்டி தீர்க்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்னைகளும் இருக்கின்றன" என்கிறார் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத். அவர் நம்மிடம், " ஐந்நூறு டாஸ்மாக் கடைகளை மூடவும், டாஸ்மாக் கடைகளின் பணி நேரத்தை குறைத்தும் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. பகல் 12 .00 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளை இரவு 10.00 மணிக்கு மூடுவதற்குப் பதில் இரவு 9.00 மணிக்கு மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதேபோல், கல்வி நிறுவனங்கள்,வழிபாட்டுத் தலங்கள், நெடுஞ்சாலைகள் அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளும் நிரந்தரமாக மூடப்பட வேண்டும். அதுபோலவே, மதுவுக்கு அடிமையானவர்களை, அதிலிருந்து மீட்பதற்கான சிகிச்சை மையங்களை மாவட்டம்தோறும் தொடங்குவதற்கு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு வருவாய் ஈட்டும் நோக்கத்தோடு மது விற்பனை நடைபெறுவதை மாற்றியமைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.



மதுப் பழக்கத்திலிருந்து படிப்படியாக மக்களை மீட்கும் நோக்கத்துடன் கூடிய மது விற்பனை கொள்கையை உருவாக்கும் முயற்சியில் புதிய அரசு ஈடுபட வேண்டும். மது விற்பனையில் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டு வந்தால்தான், குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையும். மது அருந்திட உரிமம் பெறும் முறையையும், உரிமம் உள்ளவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யும் முறையையும் கொண்டு வரவேண்டும். மதுவுக்கு எதிரான தீவிரப் பிரச்சாரத்திற்கு தமிழக அரசு கூடுதல் முக்கியத்துவம் வழங்கிட வேண்டும்” என்கிறார் உறுதியாக. 

No comments:

Post a Comment