Monetize Your Website or Blog

Friday, 27 May 2016

உசேன் போல்ட், மெஸ்ஸியை முந்திய விராட் கோலி..!

ந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணித் தலைவரும், நட்சத்திர வீரருமான விராட் கோலி, உலகளவில் விற்பனைக்குரிய விளையாட்டு வீரராக (Marketable Sports person) சமீபத்திய ஆய்வு ஒன்றில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



;ஸ்போர்ட்ஸ் புரோ; என்ற விளையாட்டு பத்திரிகை நடத்திய ஆய்வில் இது வெளியிடப்பட்டு உள்ளது. முதலிடத்தை என்பிஏ கூடைப்பந்து விளையாட்டு வீரர் ஸ்டீபன் கர்ரி பிடித்துள்ளார்.

2வது இடத்தை ஜுவென்டஸ் சர்வதேச பிரஞ்ச் கால்பந்து கிளப்பை சேர்ந்த வீரர் பவுல் போக்பா பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர  வீரரும், இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணித் தலைவருமான விராட் கோலி 3ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

’நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரர் ஜோகோவிச் 23வது இடத்திலும், நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி 27வது இடத்திலும், உசேன் போல்ட் 31வது இடத்திலும் உள்ளனர்.

இந்தியப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு இந்திய டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையான சானியா மிர்சா 50வது இடத்தில் உள்ளார்.



உலகளவில் பிரபலமான ஜோகோவிச், மெஸ்ஸி மற்றும் உசைன் போல்ட் ஆகியோரை முந்தி 3வது இடத்தை விராட் கோலி பிடித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment