அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற நிகழ்வில் கட் அவுட்டை காணவில்லை என ஜெயலலிதாவை உச்சிமுகர்கின்றனர் மக்களும், பிற கட்சிகளும். அதை கேள்விப்பட்டபோது ரொம்பவே மகிழ்ச்சிதான். கட் அவுட் கலாசாரம் கடந்த ஒரு தலைமுறையில் துவங்கிய ஒரு அருவெறுப்பான விஷயம். சாதாரண உருவங்களில் துவங்கிய இந்த கட் அவுட் கலாச்சாரம் ஒருகட்டத்தில் கட்சியின் தலைவர்கள் கடவுளர்களாக தங்களை வர்ணித்துக் கொள்ளும் அளவு கொண்டுபோய்விட்டது ஒரு காலத்தில்.
கட் அவுட் கலாச்சாரம் போயிற்று என இப்போதைக்கு மகிழ்வோம். ஆனால் காலில் விழும் கலாசாரம் மாறவில்லையே. “அம்மா" என்று 45 டிகிரி வரை வளைந்து வணங்கி தாம் இப்பூவுலகில் பெற்ற பெருமையாக அமைச்சர்களும், பதவியேற்பு நிகழ்விற்கு முன்தினம் விழுந்து எழுந்தது மட்டும் மாற்றத்தில் வராதது ஏனோ.

நெடுஞ்சான்கிடையாக திராவிடக் கட்சித் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் காலில் விழுந்து தலைவர்கள் தொண்டர்கள் பூரிப்பு அடைகிறார்கள். தலைவரை மதிக்கிறோம் என்ற போர்வையில் திராவிடக் கட்சிகள் ஆரம்பித்து வைத்தது இந்தக் காலில் விழும் கலாச்சாரம். இன்று ஆல்போல் தழைத்து தமிழர்களின் அருவெறுப்பான அடையாளமாக மாறிவிட்டிருக்கிறது.
வாழும்போதே கிடைக்கிற இந்த புகழ் போதை தலைவர்களின் கண்களை மறைக்கிறது. மனதார ஆதரிக்கிறார்கள். தொண்டனும் கிடைக்கும் பணத்துக்காகவும், எதிர்காலத்தில் எம்.எல்.ஏ, எம்.பி க்களாக சைரன் கார்களில் வருவதற்கான அச்சாரமாக இத்தகைய அவலங்களை அரங்கேற்றுகிறார்கள்.

ஒரு மனிதன் தன்னைப்போன்ற மனிதனிடம் தன் மிகச்சிறப்பு வாய்ந்த தலையை அவன் காலடியில் கொண்டு வைப்பது சுயமரியாதைக்கு இழுக்கு என்று அவர்கள் சிந்திக்காதது ஏன் எனத் தெரியவில்லை. பெரியாரின் வழிவந்தவர்கள் என்று கூறிக்கொள்கிற இவர்கள் உண்மையில் பெரியாரின் சுயமரியாதை கருத்துக்களை படித்திருக்கிறார்களா இல்லையா என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
பெரியார் காட்டிய சுயமரியாதை கருத்துக்களை படியுங்கள் பெரியாரின் தொண்டர்களே...
பெரியார் காட்டிய சுயமரியாதை கருத்துக்களை படியுங்கள் பெரியாரின் தொண்டர்களே...

No comments:
Post a Comment