Monetize Your Website or Blog

Tuesday, 24 May 2016

ரிகர்சல் முடித்தும் காலில் விழுந்த அமைச்சர்: கோபத்தில் முதல்வர்

அடுத்தடுத்து ஆட்சியமைக்கும் எம்.ஜி.ஆரின் தமிழக பார்முலாவை அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்முறையாக (2011-16, 2016-2021) தக்க வைத்திருக்கிறார்.



அதிமுகவின் மீதான மக்கள் கோபத்தின் அல்லது முகச் சுளிப்பின் பிரதான வெளிப்பாடான  சாலையை மறிக்கும் கட்-அவுட் வைப்புகளும், காலில் விழுதலும் 23.5.2016 அன்று நடந்த மந்திரிசபை பதவியேற்பின் போது முற்றிலும் தொலைந்திருக்கிறது. விழா நடக்கும் சென்னை பல்கலை.யின் நுழைவாயிலில் கூட கட் அவுட்கள் இல்லாதது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

  முந்தைய நாள் பயிற்சியின் போது திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுக்கப் பட்ட 'காலில் விழாதீர்' என்ற பாடத்தை மட்டும் மறந்து விட்டு முதல்வர் ஜெயலலிதா காலில் விழுந்த மந்திரி செல்லூர் ராஜை முதல்வர் பார்த்த ஒரு கோபப் பார்வை அதற்கடுத்த மந்திரிகளை அதிகளவு குனிய விடாமல் பார்த்துக் கொண்டது.

 "மந்திரிகளாக 14 பேர் முதலிலும், அடுத்து 14 பேரும் ஒரே குரலில் உறுதிமொழியேற்புடன் கூடிய பதவியேற்பு  குறித்த  நேரத்தில் முடிந்து விடும். நீங்கள் ( பதவியேற்கவுள்ள எம்.எல்.ஏ.க்கள்) அனைவரும் 22-ந்தேதி இரவு 8 மணிக்கு விழா மண்டபத்துக்கு வந்து விட வேண்டும்" என்று ஞாயிற்றுக் கிழமை காலையே தகவல் சொல்லப் பட்டது.

அதன்படி மந்திரிகளாக  பொறுப்பேற்கவிருந்த எம்.எல்.ஏ.க்கள் சென்னை பல்கலை நூற்றாண்டு விழா மண்டபத்துக்கு வந்து விட்டனர். அங்கே, அவர்களுக்கான ஒழுங்கு முறை குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது. 
மந்திரி பதவியேற்க உள்ளோர் எத்தனை மணிக்குள் அரங்கத்துக்குள் வந்து விட வேண்டும், குடும்ப உறுப்பினர்களுக்கு எத்தனை அனுமதி பாஸ், அவர்கள் அமரும் இடம் எது? போன்றவைகள் குறித்த அறிவுரைகளும்,  அங்கே வழங்கப் பட்டது.

முதல்நாள் பயிற்சி 22-ந்தேதி முடிந்த பின்னர், மறுநாள் காலையிலேயே (இன்றும்) அதே அரங்கத்துக்கு மறு ஒத்திகை பார்க்க அனைவரும் வந்து விட வேண்டும் என்றும் சொல்லப் பட்டது. அதன்படி இன்று காலை மீண்டும் அங்கே மந்திரியாகக் கூடிய எம்.எல்.ஏ.க்கள் குறித்த நேரத்தில் வந்து விட்டனர்.


இன்னொரு பக்கம் அதே விழா மண்டபத்தின் இன்னொரு பக்கத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வில் தொடர்ந்து இரண்டு நாட்கள் காவல் உயரதிகாரிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்
 
 பதவியேற்பு விழாவை நேரடியாக காண வாய்ப்பு இல்லாத கட்சியினர் ,பொதுமக்கள் காணும் வாய்ப்பாக செய்தித்துறை சார்பில் வேன்களில் அரசுச் செய்திப் படமாக விழா நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பானது. பதவியேற்பு  நிகழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக வெளியே பட்டாசு வெடித்தல் போன்றவைகளுக்கு சைலண்ட்டாக தடையுத்தரவு இருந்ததால் போலீசார்  தீவிரமாக கண்காணிப்பை மேற் கொண்டனர்.

கடற்கரை காமராஜர் சாலையில் அதிகமாய் கட் அவுட் வைக்கும் தங்கமணி, செந்தில்பாலாஜி, கோகுல இந்திரா, பா.வளர்மதி ஆகியோரில் மீண்டும் மந்திரியாகி இருப்பவர் தங்கமணி மட்டுமே, ஆனாலும் தங்கமணி சார்பில் கட் அவுட் அங்கே இல்லை. 
19-ந்தேதி இரவே கட்-அவுட்டுக்கும், காலில் விழுதலுக்கும் அம்மா 'தடா' போட்டு விட்டார். அதன் எதிரொலிதான் இது" என்று நெக்குருகி குறிப்பிடு கின்றனர், ர,ர.க்கள்.

பதவியேற்பு வைபவம் முடிந்ததும் கோட்டைக்கு போன முதல்வர் ஜெயலலிதா, அங்கே 4 கோப்புகளில் கையெழுத் திட்டார். அதில் முதல் கையெழுத்து, 'பள்ளிக் குழந்தை களுக்கு காலை சிற்றுண்டி இலவசம்'  என்பதில் தான்.


  'படிப்படியாக' என்ற முதல்வரின் தேர்தல் அறிக்கை உறுதி மொழியில் முதல் 'கோல்' ஆக, 500 மதுக்கடைகள் மூடல் என்ற அறிவிப்பு வந்துள்ளது. அது, அடுத்தடுத்து தொடர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு ! 

No comments:

Post a Comment