Monetize Your Website or Blog

Thursday, 26 May 2016

இளைஞர்களை உத்வேகப்படுத்தும் சோம்நாத் கிராம்




ம் நாட்டு இளைஞர்களை உத்வேகப்படுத்தும் ஒரு செயல்தான், சோம்நாத் கிராம்(Somnath Giram) என்பவர் கல்வித்துறையின் அம்பாஸிடராக நிர்ணயிக்கப்பட்டது. சோம்நாத், 28 வயது, பூனேவைச் சார்ந்த விவசாயியின் மகன். 2008ல் சோம்நாத், தன் படிப்பிற்காக பணம் சேர்ப்பதற்காக, தன் சொந்த ஊரான சோலாப்பூரை விட்டு பூனேவிற்கு வந்தார். அங்கு ஒரு தேநீர் கடை திறந்தவர், முதலில் சொற்பமான வருமானம் பெற்று தற்போது மாதம் ரூ. 10,000 முதல் 12,000 வரை சம்பாதிக்கிறார்.

இவர் கூறுகிறார், "பரீட்சை நேரங்களில் மட்டும் நான் யாரையாவது சம்பளத்திற்கு தற்காலிகமாக வைத்துவிட்டுச் செல்வேன். அது என்னுடைய வருமானத்தைப் பாதித்தாலும், நான் என் குறிக்கோளில் தெளிவாக இருந்தேன். எனக்குப் படிப்புதான் மிகவும் அத்தியாவசியம்".

இவர் B.Com, M.Com, C.A ஆகியவைப் படித்து, தற்போது C.A பயின்று கொண்டு இருக்கிறார். ஆனால், இன்றும் அவரது தேநீர் கடை நடந்து கொண்டு இருக்கிறது.



கடந்த புதன்கிழமை, சோம்நாத்தை மஹாராஷ்டிரா அரசு கல்வி விளம்பர தூதராக நியமித்துள்ளது (education brand ambassador). ஆமிர் கான், அமிதாப் பச்சன் என செலிப்ரிட்டிக்கள் இப்படி விளம்பர தூதர்களாக இருந்தது போக, இளைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்த முயற்சியை எடுத்துள்ளது. ஒரு அம்பாஸிடராக, சோம்நாத் பல கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் சென்று மாணவர்களோடு எப்படி சம்பாதித்துக் கொண்டே படிக்கலாம் ( how to earn & learn) என்பது பற்றி பேசுவார். இவர் கூறுகையில், " இது எனக்கு ஒரு மிகப் பெரிய பொறுப்பு. நான் இதை நிறைவேற்ற நிறைய பேச வேண்டும். ஆனால், எனக்குப் பேசத் தெரியாதே!".

இவரிடம் அரசியலில் ஈடுபடப் போகிறீர்களா எனக் கேட்டால், ஒளிவு மறைவு இல்லாமல், "எனக்கு பிரதம மந்திரியாக ஆக வேண்டும் என ஆசையில்லை. ஆனால், மஹாராஷ்டிராவின் நிதி அமைச்சராக வேண்டும் என ஆசைப்படுகிறேன்".

இன்றைய உலகில், முக்கியமாக இந்தியாவில் இளைஞர்கள் அதிக அளவில் அரசியலிலும், பொதுவாழ்விலும் ஈடுபடுவதைக் காண முடிகிறது. இது நம் நாட்டின் வளமான எதிர்காலத்தை இப்போதே காண்பிக்கிறது!



No comments:

Post a Comment