Monetize Your Website or Blog

Friday, 19 August 2016

0-41* - இது வேற மாதிரி ஆட்டம்!

தற்போதைய சினிமா ஆர்வலர்கள் மத்தியில் இன்டிபெண்டன்ட் சினிமாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதில் மலையாள சினிமா 0 - 41* மூலம் இன்னும் ஒரு அடி முன் போயிருக்கிறது. முழுக்க சினிமாவைக் கற்றவர்கள் எல்லாம் கிடையாது, படத்தில் நடித்திருப்பவர்கள் நடிகர்களும் கிடையாது.
ஏரியா பசங்களுடன் இணைந்து எடுக்கும் ஷாட்ர்ஃபிலிமையே கொஞ்சம் நீளமானதாகவும் தரமானதாகவும் எடுக்கப்பட்டிருக்கும் டாகுட்ராமா தான் 0 - 41*. படத்தின் மொத்த நீளமே 91 நிமிடங்கள் தான். 


 
ஊரில் இருக்கும் இரண்டு லோக்கல் வாலிபால் டீம். ராஜேஷ் மற்றும் விபின் இரு டீம்களுக்குமான தலைமை. ஒவ்வொரு நாள் மாலை 5 மணிக்கும் இருவரும், ஊரில் இருக்கும் வாலிபால் கிரவுண்டில் விளையாடுவார்கள். இது தான் படத்தின் கதை. நிஜமாக படத்தில் கதை என்று எதுவும் கிடையாது. அந்த கன்ஹன்கட் கிராமத்தில் இருக்கும் சில மனிதர்கள், அவர்களின் கதைகள், அவர்களின் அனுபவங்கள், நம்பிக்கைகள், பயங்கள் மற்றும் இந்த உலகம் பற்றிய அவர்களது பார்வை இத்துடன் கொஞ்சம் சம்பவங்கள் தான் படம். 
 
படத்தின் இயக்குநர் சென்ன ஹெக்டே படம் பற்றி சொல்லும் போது "படத்தில் நடிகர்கள் இல்லை, மேக்-அப் இல்லை, ரிகர்சல் இல்லை,  கன்னன்கட் கிராமத்து ஸ்லாங் வசனங்கள் தான் படம் முழுக்க இருக்கும், நடித்திருப்பவர்கள் தங்கள் பெயர்களையே கதப்பாத்திரங்களாக வைத்திருப்பார்கள், லைவ் லெகேஷன்கள் என கொஞ்சம்  கன்ஹன்கட்  கிராமத்தில் நீங்கள் உலவி வந்தது போன்ற ஒரு ஃபீலைக் கொடுக்கும் என்கிறார். இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார் பிஜிபால்.


 
மியாமி, நொய்டா, அமெரிக்கா என பல நாடுகளில் திரைவிழாக்களில் பாராட்டு பெற்று வருகிறது 0 - 41*. விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்கிறார் இயக்குநர்.
 
அதென்ன 0-41*-? வி ஆர் வெய்ட்டிங் பாஸ்!




No comments:

Post a Comment