சென்னை வார் மெமோரியலில் இருந்து கலங்கரை விளக்கம் வரையிலான மூன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடினால் என்ன வாங்கலாம். நம்மால் மூச்சு மட்டுமே வாங்க முடியும். ஆனால் உசேன் போல்ட் 9 தங்கப் பதக்கங்களை வாங்கியுள்ளார். 2004,2008,2012,2016 ஆகிய நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் உசேன் போல்ட் மொத்தம் ஓடியதே மூன்றரை கிலோமீட்டர்தான்.
இந்த மூன்றரை கிலோ மீட்டரை ஓட போல்ட் எடுத்துக் கொண்ட நேரம் 5.77 நிமிடங்கள் மட்டுமே. கூகுளில் தேடுங்கள், பஸ்ஸில் செல்லவே 13 நிமிடங்கள் ஆகுமாம்.
2004 ஒலிம்பிக்கின், 200 மீட்டர் போட்டியில் தோல்வியுடன் தொடங்கிய போல்ட், இலக்கை அடைய எடுத்துக் கொண்ட நேரம் 21.05 வினாடிகள். ஆனால் அவர் கொடுத்த டீ என்ட்ரியை டேபிளில் பாருங்கள்.

அனைத்து பந்தயங்களிலும் போல்ட் தன் முழு திறனை செலுத்தி இருந்தால் இந்த நேரம் இன்னும் குறைந்திருக்கும். ஆனால் போல்ட் ஒரு வின்னிங் பேட்டர்னை பின்பற்றுகிறார்.
2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 200 மீட்டர் போட்டியில் போல்ட்டின் டைமிங்கை எடுத்துக் கொள்வோம். முதல் தகுதிச் சுற்றில் இலக்கை 20.64 விநாடிகளில் கடக்கிறார். காலிறுதியில் 20.29 வினாடிகளில் கடக்கிறார். அரையிறுதியில் 20.09 வினாடிகளில் கடக்கிறார். இறுதிச் சுற்றில் 19.30 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கத்தை தட்டிச் சென்றார். முதல் சுற்றுக்கும் இறுதி சுற்றுக்கு 1.34 வினாடிகள் வித்தியாசம். இதே வின்னிங் பேட்டர்னை ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும், ஒவ்வொரு போட்டியிலும் பார்க்கலாம். ஒவ்வொரு சுற்றுக்கும் இடையிலான இடைவேளை குறைவு. எனவே முதல் சுற்றிலேயே முழு சக்தியையும் வெளிப்படுத்தினால், குறுகிய நேரத்தில் அடுத்த சுற்றுக்கு தேவையான முழு எனர்ஜியை மீட்டெடுப்பது சிரமம். ரியோவில் 4*100 மீட்டர் போட்டியில் தங்கம் குறைந்த வேகத்தில் ஓடியதற்கு, அரையிறுதிக்கும் காலிறுதிக்குமான இடைவேளை குறைவே காரணம் என்றார்.
| 100 Meters | 200 Meters | 4*100 Meters | ||||||||
| Olympic | Rounds | Timing | Olympic | Rounds | Timing | Olympic | Rounds | timing | ||
| 2008 | Round One | 10.2 | 2004 | Round one | 21.05 | 2008 | Final | 8.98 | ||
| 2008 | Quater Finals | 9.92 | 2008 | Round one | 20.64 | 2012 | Final | 8.7 | ||
| 2008 | Semi Finals | 9.85 | 2008 | Quater Finals | 20.29 | 2016 | Final | 8.97 | ||
| 2008 | Finals | 9.69 | 2008 | Semi Finals | 20.09 | |||||
| 2012 | Round One | 10.09 | 2008 | Finals | 19.3 | |||||
| 2012 | Semi Finals | 9.87 | 2012 | Round one | 20.39 | |||||
| 2012 | Finals | 9.63 | 2012 | Semi Finals | 20.18 | |||||
| 2016 | Round One | 10.07 | 2012 | Finals | 19.32 | |||||
| 2016 | semi Finals | 9.86 | 2016 | Round one | 20.28 | |||||
| 2016 | Finals | 9.81 | 2016 | semi Finals | 19.78 | |||||
| 2016 | Finals | 19.78 | ||||||||
போல்ட் ஓடியது 5.77 நிமிடங்கள் தான் என்றாலும், அதற்குள் 12 ஆண்டுகளின் உழைப்பு இருக்கிறது.

No comments:
Post a Comment