Monetize Your Website or Blog

Thursday, 18 August 2016

தலைமைச் செயலகம் வந்தார் ஸ்டாலின்..! - சட்டப்பேரவை வாயில் கதவு மூடப்பட்டதால் பரபரப்பு

சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கோட்டையில் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் 80 பேர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள், ஒரு வார காலத்துக்கு சட்டமன்றத்துக்குள் நுழையவும் சபாநாயகர் தனபால் தடை விதித்தார். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின், துரைமுருகன் தவிர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த தி.மு.க உறுப்பினர்கள் 78 பேரும் கோட்டைக்கு வந்தனர்.

சட்டமன்றத்துக்குள் செல்லும் 4&ம் எண் கேட் வழியாக அவர்கள் உள்ளே போனார்கள். அந்த இடத்தில் கேட்டின் உட்புறம் நின்றிருந்த சட்டமன்ற அவைக் காவலர்கள், அந்த 78 பேரையும் அங்கேயே தடுத்து நிறுத்தினர். ‘சட்டமன்ற வளாகத்துக்குள் செல்ல உங்களுக்கு அனுமதி இல்லை’ என்று சபைக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

தலைமைச் செயலகம் வந்தார் ஸ்டாலின்..! - சட்டப்பேரவை வாயில் கதவு மூடப்பட்டதால் பரபரப்பு

சென்னை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கோட்டையில் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் 80 பேர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள், ஒரு வார காலத்துக்கு சட்டமன்றத்துக்குள் நுழையவும் சபாநாயகர் தனபால் தடை விதித்தார். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின், துரைமுருகன் தவிர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த தி.மு.க உறுப்பினர்கள் 78 பேரும் கோட்டைக்கு வந்தனர்.

சட்டமன்றத்துக்குள் செல்லும் 4&ம் எண் கேட் வழியாக அவர்கள் உள்ளே போனார்கள். அந்த இடத்தில் கேட்டின் உட்புறம் நின்றிருந்த சட்டமன்ற அவைக் காவலர்கள், அந்த 78 பேரையும் அங்கேயே தடுத்து நிறுத்தினர். ‘சட்டமன்ற வளாகத்துக்குள் செல்ல உங்களுக்கு அனுமதி இல்லை’ என்று சபைக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

‘சட்டமன்றத்துக்குள் செல்லவில்லை; திமுக சட்டமன்ற அலுவலகத்துக்குத்தான் செல்கிறோம்’ என்று எம்.எல்.ஏக்கள் சொன்னார்கள். ஆனாலும் அவைக் காவலர்கள் அனுமதி கொடுக்கவில்லை. கேட்டை மூடி விட்டு உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இந்நிலையில், திமுக உறுப்பினர்கள், சபாநாயகரையும் அதிமுக அரசையும் கண்டித்து கோஷம் எழுப்பினர்.

அந்த இடத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஸ்டாலினும் துரைமுருகனும் சிறிதுநேரத்தில் அங்கு வந்தனர். அவர்களையும் சபைக்காவலர்கள் தடுத்துநிறுத்தினர். அதற்கு அவர்கள், தாங்கள் தங்கள் அலுவலகத்திற்குள் செல்லவேண்டும் என்று அங்குள்ள காவலர்களிடம் முரண்டு பிடிக்க அவர்கள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். இதனால் சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதனால் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கும் விதமாக காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment