ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பேட்மிட்டன் ஒற்றையர் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய பி.வி.சிந்து, விஜய பிரபாகரனின் 'சென்னை ஸ்மாஷர்ஸ்' டீமில் விளையாடி அசத்தியவர். விஜய் பிரபாகரன் கேப்டன் விஜயகாந்த்தின் மூத்த மகன். இவரிடம் சிந்து வெற்றி குறித்து கேட்டோம்.
"ஒலிம்பிக்-ல அரையிறுதிக்கு முன்னேறி இருக்கும் சிந்துகிட்ட வாழ்த்துகள் சொன்னீங்களா?"
"காலிறுதியில் ஜெயிச்சதும் சிந்துவை கூப்பிட்டு உடனே வாழ்த்துகள் சொல்லிட்டேன். 'முழு எனர்ஜியோட நம்பிக்கையாக விளையாடுங்க. தங்கம் பதக்கம் ஜெயிச்சு இந்தியாவுக்கு பெருமை சேருங்க'னு சொன்னேன். அவங்களும் அதே நம்பிக்கையில் தீவிரமான பயிற்சி எடுத்துட்டு இருக்காங்க. செம ஹாப்பியாக நம்பிக்கையாக இருக்காங்க."

"முதல் முதல்ல சிந்துவை எங்க பார்த்தீங்க?"
"பேட்மிட்டன் லீக் கிளப் போட்டிக்காக சென்னை வந்திருந்தாங்க சிந்து. ஒரு ப்ரோமோ ஷூட் நடந்தது. அப்பதான் சிந்துவை முதல்ல பார்த்தேன். செம போல்ட் ஃபர்சன். ரொம்ப ப்ரெண்ட்லி."
"எதனால் சிந்துவை உங்க 'சென்னை ஸ்மாஷர்ஸ்' டீம்ல செலக்ட் பண்ணீங்க?"

"எனக்கு சின்ன வயசுல இருந்தே பேட்மிட்டன் கேம்ல ரொம்ப ஆர்வம். 'சென்னை ஸ்மாஷர்ஸ்' டீம் தொடங்கினதும் எங்க டீம்ல சிந்து கண்டிப்பாக இருக்கணும்னு நினைச்சேன். வேற எந்த ப்ளேயரையும் என்னால யோசிக்ககூட முடியலை. அவங்க யங் ரொம்ப எனர்ஜியோட விளையாடுவாங்க. எங்க டீம்லயும் ஜெயிச்சு பல வெற்றிகளை குவிச்சாங்க. இப்ப ஒலிம்பிக்லயும் வெற்றியை குவிக்கப்போறாங்க. சிந்து ஜெயிப்பதற்காகவே பிறந்தவங்க. கண்டிப்பாக பைட் செஞ்சு கோல்ட் மெடல் வாங்குவாங்க."
"ஒலிம்பிக் காலிறுதி வெற்றிக்கு பிறகு சிந்து ஏதாவது சொன்னாங்களா?"
"கோல்ட் மெடல் ஜெயிக்கணும்னு என்கிட்ட சொன்னாங்க. நிச்சயம் ஜெய்ப்பாங்க. ஆல் தி பெஸ்ட் சிந்து. வீ ஆர் வெயிட்டிங்."

No comments:
Post a Comment