Monetize Your Website or Blog

Saturday, 20 August 2016

4x100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் தட்டினார் உசேன்!

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


ஜமைக்கா நாட்டை சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட், ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் மட்டும் தொடர்ந்து 9 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார்.
பீஜிங் ஒலிம்பிக்கில் 3 தங்கமும் (100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீட்டர் தொடர் ஓட்டம்), லண்டன் ஒலிம்பிக்கில் 3 தங்கமும் (100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீட்டர் தொடர் ஓட்டம்) ஜமைக்கா நாட்டை சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் வென்றிருந்தார்.
அந்த சாதனையின் தொடர்ச்சியாக, தற்போது ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் ஒரு தங்கப் பதக்கத்தையும், அடுத்ததாக 200 மீ. ஓட்டத்தின் இறுதிச்சுற்றில் போல்ட் 19.78 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். அவருக்கு அடுத்தபடியாக கனடாவின் ஆன்ட்ரே டி கிரேஸ் (20.02) வெள்ளியும், பிரான்ஸின் கிறிஸ்டோப் லீமெய்ட்ரே (20.12) வெண்கலமும் வென்றனர். அதை தொடர்ந்து, 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் அவர் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தது.


இந்நிலையில், மிகவும் பரபரப்பாக இன்று நடைபெற்ற 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 37.27 வினாடிகளில் வெற்றிக் கோட்டை கடந்து,  இந்த ஒலிம்பிக்கின் மூன்றாவது தங்கத்தை உசேன் போல்ட் தட்டிச் சென்றுள்ளார். இந்த வெற்றியுடன், தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் 9 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துளார் உசேன் போல்ட்.

No comments:

Post a Comment