கட்சி மேலிடம், பத்திரிகையாளர்கள், மக்கள், சக அரசியல்வாதிகள் என பலமுனைகளிலும் விமர்சனங்களை எதிர்கொள்பவர்கள் அரசியல்வாதிகள். குறிப்பாக பெண் அரசியல்வாதிகள்! பரபரப்பான அரசியல் களத்தில் கூடுதல் மன அழுத்தங்களையும் விமர்சனங்களையும் நாள்தோறும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது அவர்கள். இதனால் ஏற்படும் மனச் சோர்வினை பெண் அரசியல் தலைவர்கள் எப்படி வென்றெடுக்கிறார்கள்...?
இந்திய அளவில் பெண் அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணம் தமிழக முதல்வர் ஜெயலலிதா. தனிமை விரும்பியான அவரும் தனக்கான துணையாக தேர்ந்தெடுப்பது புத்தகங்களைத்தான். இளம் வயதிலிருந்தே புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்து கொண்ட அவர், 'புத்தக வாசிப்பு என்பது பலநேரங்களில் தேவையற்றவர்களிடம் தேவையற்று பேசுவதை தவிர்க்கவும் உதவும்' என குறிப்பிட்டிருக்கிறார் தம் ஒரு பேட்டியில். பரபரப்பான அரசியல்வாதியாக அவர் மாறியபின் மக்கள் கூட்டங்களை கண்டுதான் தனக்கான நெருக்கடிகளிலிருந்து மீண்டார் என்பார்கள்.
எத்தனை டென்ஷன் ஆனாலும், தொண்டர்களை கண்டுவிட்டால் அவரது பேச்சில் உற்சாகமும் முகத்தில் மென்மையான சிரிப்பும் குடிகொள்ளும். இப்படி வலிமையான பெண்களையும் ஏதோ ஒன்றை தேட வைக்கும் அந்த மன அழுத்தை இன்றைய பெண் அரசியல்வாதிகள் எப்படி கையாளுகிறார்கள்... அவர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகள் என்ன என்பது குறித்து அவர்களிடம் நேரிடையாக உரையாடினோம்.
"சிரித்து விடுவேன்..."!- தமிழிசை சவுந்தரராஜன், பாஜக, தமிழ்நாடு மாநிலத் தலைவர்
"உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டால் உடல் நிலையில் மிக மோசமான விளைவுகளை ஏற்படும் என்பது ஒரு மருத்துவராக எனக்குத் தெரியும் என்பதால் மன அழுத்தத்தை கையாள்வதில் மிகவும் விழிப்புணர்வோடு இருப்பேன். சில உணர்வுகளைக் கையாள வேண்டிய அணுகுமுறைகளை நாம் அறிந்திருக்க வேண்டும். சட்டென்று கோபப்படுவது குறித்து நாம் ஆராய வேண்டும். எனக்கு டென்ஷனோ அல்லது மன அழுத்தமோ ஏற்பட்டால் சில நிமிடங்கள் கழித்து சிரித்து விடுவேன் . நன்றாக வாய்விட்டு சிரித்து விடுவேன். விமர்சனங்களை பற்றி நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். என்னை நான் வலிமை உள்ளவளாக நிலை நிறுத்திக் கொள்வேன்.
எந்த விஷயத்தையும் நேர்மையுடன் அணுகும்போது எதற்கு விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டும். என் எதிரில் நின்று என்னை யார் திட்டினாலும் அதை நான் மனதில் ஏற்றிக்கொள்ள மாட்டேன். நான் அதை ஏற்றுக்கொண்டால் அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் என்பதால் விமர்சனங்களையோ, கோபங்களையோ நான் என்னிடம் நெருங்க விட்டதில்லை.
சமூக வலைத்தளங்களில் வரும் விமர்சனங்களை சில பெண்கள் பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள். என் உருவத்தைப் பலரும் கிண்டல் செய்துள்ளார்கள். அதையெல்லாம் நான் ஒருபொருட்டாக எடுத்துக் கொண்டதில்லை. விமர்சனங்களைக் கண்டு கவலைகொள்ளும்போது தான் பெண்களுக்கு அரசியலில் சறுக்கல்கள் ஏற்படும். விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொண்டு இன்றைய பெண்கள் அரசியலுக்கு வரத் தயங்குகிறார்கள். அது தவறான கண்ணோட்டம். இந்த விமர்சனங்களையும், வசைகளையும் பொருட்படுத்திக் கொண்டே இருந்தால், பெண்களால் ஒன்றுமே செய்ய முடியாது. விமர்சனம் என்பது எல்லா இடத்திலும் உள்ளது. அதை ஏற்றுக்கொள்ளாமல் புறம் தள்ள வேண்டும்"
தியானமும் புத்தக வாசிப்பும்! - ஜோதிமணி காங்கிரஸ்
"அரசியல் என்பது கார்பரேட் நிறுவனம் அல்ல. சவாலான இடத்தில்தான் இயங்க வேண்டியுள்ளது. பொதுவாக குடும்பத் தளத்தில் உள்ள பெண்களாக இருந்தால் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு கொண்டு ஒரு சலுகையாகத்தான் அரசியல் பணிகளைக் கவனிக்க விடுவார்கள். அரசியலைப் புரிந்து கொள்ளாத குடும்பத்தில் இருந்து வரும் பெண்களுக்கு பெரும்பாலும் அரசியல்களம் என்பது பெரும் சிக்கல்தான். கொள்கை அடிப்படையிலோ அல்லது பிரச்னைகளின் அடிப்படையிலோ இயங்கும் பெண்களுக்கு அழுத்தங்கள் இருக்கும். அத்தகையப் பெண்களுக்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நிறைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நான் கோபத்தை குறைக்க தியானம் செய்கின்றேன். இதனால், அழுத்தமான அரசியல் நெருக்கடியான சமயங்களில் எனக்குள் எழும் கோபங்களை கட்டுப்படுத்த முடிகிறது.கோபப்பட்டால்தான் வேலை நடக்கும் என்ற நிலை வந்தால் அந்த இடத்தில், கொஞ்சம் குரலை உயர்த்திப் பேசுவேன். கோபப்படவில்லை என்றால் நம் உடல் நிலை சீராக இருக்கும். மன அழுத்தமாக உள்ள தருணங்களில் நிறையப் புத்தகங்களைப் படிப்பேன். எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும் ,குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் அன்பும் ஆதரவும் என்னை அதில் இருந்து வெளியில் கொண்டு வந்துவிடும்.
நேர்மையாகவும் , தீவிரமாகவும் எதையும் கையாளும் போது தடைகள் இருக்கும் . அந்தத் தடைகள் என்பது எல்லா நாட்களிலும் தொடராது. என்றாவது ஒரு நாள் உடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கையைப் பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நேர்மையாக இருந்தால் போதும் எந்த சிக்கல்களிலிருந்தும் மீண்டு வர முடியும். பெரும்பாலும் நெருக்கடியான தருணங்களில் குடும்பத்துடனும், புத்தகங்களுடன், இயற்கையுடனும் என்னுடைய நேரத்தைக் கழித்துள்ளேன்"
"நேர்மையாக, தைரியமாக ...!”- பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
எங்கள் இயக்கத்தில் கருத்துக்களைச் சொல்வதற்கான ஜனநாயகம் உள்ளது. என்னைப் பற்றி கோபமூட்டுகிற கருத்தையோ யாராவது சொன்னால், அதற்கான விளக்கத்தைக் கொடுக்க எங்களுடைய கட்சிக்குள் அனுமதி உள்ளது. அப்போது நான் கோபமாகப் பேசினாலும் கட்சியில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். கட்சிக்குள் நான் என்ன சொல்ல வருகிறேனோ அந்தக் கருத்தைச் சொல்லி விடுவேன். யாருக்காகவும் எதற்காகவும் தயங்க மாட்டேன். மற்றவர்கள் சொல்கிற, தனிநபர்கள் சொல்கின்ற விமர்சனங்கள் உண்மைக்கு மாறாக இருந்து, அது தொடர்பாக நான் விளக்கம் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால் அது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
வேறு என்ன செய்ய முடியும் என்று யோசிப்பேன். அதை மற்றவர்கள் மீது எந்த நேரத்திலும் காட்டிவிடக்கூடாது என்று கவனமாக இருப்பேன். அப்படியெல்லாம் நம்மை நாம் தேற்றிக் கொண்டால் கூட அந்தப் பிரச்னையின் அழுத்தம் அப்படியேதான் இருக்கும். அடுத்த செயல்பாட்டுக்குச் செல்லவிடாமல் நம்மைத் தடுக்கும். இந்த மாதிரியான நேரத்தில் எனக்கு இலக்கியம்தான் கைகொடுக்கும். வேறறொரு தளத்துக்குச் சென்று அங்கே உட்கார்ந்து இயற்கை பற்றிய கவிதையோ அல்லது சமூகத்தில் பார்த்த விஷயங்களையோ நான் எழுதிவிடுவேன். அப்போது எனக்கு ஒரு பதில் கிடைக்கும்.
எதையும் மனதுக்குள் அடைத்து புழுங்கினால் பிரச்னைதான். அதனை வெளிப்படுத்தி விட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதில்தான் நாம் கவனம் கொள்ள வேண்டும். பொதுவாக அரசியலில், கருத்துக்களை மனம்விட்டுச் சொல்லாமல் தந்திர அரசியலைக் கையாளக்கூடியவர்கள் அதிகப் பிரச்னைளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தந்திர அரசியலுக்குள் நான் செல்வது கிடையாது. நேர்மையாக, தைரியமாக கருத்துக்களைச் சொல்கிறவர்கள் கலங்குவதில்லை.
இந்திய அளவில் பெண் அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணம் தமிழக முதல்வர் ஜெயலலிதா. தனிமை விரும்பியான அவரும் தனக்கான துணையாக தேர்ந்தெடுப்பது புத்தகங்களைத்தான். இளம் வயதிலிருந்தே புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்து கொண்ட அவர், 'புத்தக வாசிப்பு என்பது பலநேரங்களில் தேவையற்றவர்களிடம் தேவையற்று பேசுவதை தவிர்க்கவும் உதவும்' என குறிப்பிட்டிருக்கிறார் தம் ஒரு பேட்டியில். பரபரப்பான அரசியல்வாதியாக அவர் மாறியபின் மக்கள் கூட்டங்களை கண்டுதான் தனக்கான நெருக்கடிகளிலிருந்து மீண்டார் என்பார்கள்.
எத்தனை டென்ஷன் ஆனாலும், தொண்டர்களை கண்டுவிட்டால் அவரது பேச்சில் உற்சாகமும் முகத்தில் மென்மையான சிரிப்பும் குடிகொள்ளும். இப்படி வலிமையான பெண்களையும் ஏதோ ஒன்றை தேட வைக்கும் அந்த மன அழுத்தை இன்றைய பெண் அரசியல்வாதிகள் எப்படி கையாளுகிறார்கள்... அவர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகள் என்ன என்பது குறித்து அவர்களிடம் நேரிடையாக உரையாடினோம்.
"சிரித்து விடுவேன்..."!- தமிழிசை சவுந்தரராஜன், பாஜக, தமிழ்நாடு மாநிலத் தலைவர்"உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டால் உடல் நிலையில் மிக மோசமான விளைவுகளை ஏற்படும் என்பது ஒரு மருத்துவராக எனக்குத் தெரியும் என்பதால் மன அழுத்தத்தை கையாள்வதில் மிகவும் விழிப்புணர்வோடு இருப்பேன். சில உணர்வுகளைக் கையாள வேண்டிய அணுகுமுறைகளை நாம் அறிந்திருக்க வேண்டும். சட்டென்று கோபப்படுவது குறித்து நாம் ஆராய வேண்டும். எனக்கு டென்ஷனோ அல்லது மன அழுத்தமோ ஏற்பட்டால் சில நிமிடங்கள் கழித்து சிரித்து விடுவேன் . நன்றாக வாய்விட்டு சிரித்து விடுவேன். விமர்சனங்களை பற்றி நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். என்னை நான் வலிமை உள்ளவளாக நிலை நிறுத்திக் கொள்வேன்.
எந்த விஷயத்தையும் நேர்மையுடன் அணுகும்போது எதற்கு விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டும். என் எதிரில் நின்று என்னை யார் திட்டினாலும் அதை நான் மனதில் ஏற்றிக்கொள்ள மாட்டேன். நான் அதை ஏற்றுக்கொண்டால் அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் என்பதால் விமர்சனங்களையோ, கோபங்களையோ நான் என்னிடம் நெருங்க விட்டதில்லை.
சமூக வலைத்தளங்களில் வரும் விமர்சனங்களை சில பெண்கள் பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள். என் உருவத்தைப் பலரும் கிண்டல் செய்துள்ளார்கள். அதையெல்லாம் நான் ஒருபொருட்டாக எடுத்துக் கொண்டதில்லை. விமர்சனங்களைக் கண்டு கவலைகொள்ளும்போது தான் பெண்களுக்கு அரசியலில் சறுக்கல்கள் ஏற்படும். விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொண்டு இன்றைய பெண்கள் அரசியலுக்கு வரத் தயங்குகிறார்கள். அது தவறான கண்ணோட்டம். இந்த விமர்சனங்களையும், வசைகளையும் பொருட்படுத்திக் கொண்டே இருந்தால், பெண்களால் ஒன்றுமே செய்ய முடியாது. விமர்சனம் என்பது எல்லா இடத்திலும் உள்ளது. அதை ஏற்றுக்கொள்ளாமல் புறம் தள்ள வேண்டும்"
தியானமும் புத்தக வாசிப்பும்! - ஜோதிமணி காங்கிரஸ்
"அரசியல் என்பது கார்பரேட் நிறுவனம் அல்ல. சவாலான இடத்தில்தான் இயங்க வேண்டியுள்ளது. பொதுவாக குடும்பத் தளத்தில் உள்ள பெண்களாக இருந்தால் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு கொண்டு ஒரு சலுகையாகத்தான் அரசியல் பணிகளைக் கவனிக்க விடுவார்கள். அரசியலைப் புரிந்து கொள்ளாத குடும்பத்தில் இருந்து வரும் பெண்களுக்கு பெரும்பாலும் அரசியல்களம் என்பது பெரும் சிக்கல்தான். கொள்கை அடிப்படையிலோ அல்லது பிரச்னைகளின் அடிப்படையிலோ இயங்கும் பெண்களுக்கு அழுத்தங்கள் இருக்கும். அத்தகையப் பெண்களுக்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நிறைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.நான் கோபத்தை குறைக்க தியானம் செய்கின்றேன். இதனால், அழுத்தமான அரசியல் நெருக்கடியான சமயங்களில் எனக்குள் எழும் கோபங்களை கட்டுப்படுத்த முடிகிறது.கோபப்பட்டால்தான் வேலை நடக்கும் என்ற நிலை வந்தால் அந்த இடத்தில், கொஞ்சம் குரலை உயர்த்திப் பேசுவேன். கோபப்படவில்லை என்றால் நம் உடல் நிலை சீராக இருக்கும். மன அழுத்தமாக உள்ள தருணங்களில் நிறையப் புத்தகங்களைப் படிப்பேன். எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும் ,குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் அன்பும் ஆதரவும் என்னை அதில் இருந்து வெளியில் கொண்டு வந்துவிடும்.
நேர்மையாகவும் , தீவிரமாகவும் எதையும் கையாளும் போது தடைகள் இருக்கும் . அந்தத் தடைகள் என்பது எல்லா நாட்களிலும் தொடராது. என்றாவது ஒரு நாள் உடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கையைப் பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நேர்மையாக இருந்தால் போதும் எந்த சிக்கல்களிலிருந்தும் மீண்டு வர முடியும். பெரும்பாலும் நெருக்கடியான தருணங்களில் குடும்பத்துடனும், புத்தகங்களுடன், இயற்கையுடனும் என்னுடைய நேரத்தைக் கழித்துள்ளேன்"
"நேர்மையாக, தைரியமாக ...!”- பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
எங்கள் இயக்கத்தில் கருத்துக்களைச் சொல்வதற்கான ஜனநாயகம் உள்ளது. என்னைப் பற்றி கோபமூட்டுகிற கருத்தையோ யாராவது சொன்னால், அதற்கான விளக்கத்தைக் கொடுக்க எங்களுடைய கட்சிக்குள் அனுமதி உள்ளது. அப்போது நான் கோபமாகப் பேசினாலும் கட்சியில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். கட்சிக்குள் நான் என்ன சொல்ல வருகிறேனோ அந்தக் கருத்தைச் சொல்லி விடுவேன். யாருக்காகவும் எதற்காகவும் தயங்க மாட்டேன். மற்றவர்கள் சொல்கிற, தனிநபர்கள் சொல்கின்ற விமர்சனங்கள் உண்மைக்கு மாறாக இருந்து, அது தொடர்பாக நான் விளக்கம் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால் அது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
வேறு என்ன செய்ய முடியும் என்று யோசிப்பேன். அதை மற்றவர்கள் மீது எந்த நேரத்திலும் காட்டிவிடக்கூடாது என்று கவனமாக இருப்பேன். அப்படியெல்லாம் நம்மை நாம் தேற்றிக் கொண்டால் கூட அந்தப் பிரச்னையின் அழுத்தம் அப்படியேதான் இருக்கும். அடுத்த செயல்பாட்டுக்குச் செல்லவிடாமல் நம்மைத் தடுக்கும். இந்த மாதிரியான நேரத்தில் எனக்கு இலக்கியம்தான் கைகொடுக்கும். வேறறொரு தளத்துக்குச் சென்று அங்கே உட்கார்ந்து இயற்கை பற்றிய கவிதையோ அல்லது சமூகத்தில் பார்த்த விஷயங்களையோ நான் எழுதிவிடுவேன். அப்போது எனக்கு ஒரு பதில் கிடைக்கும்.எதையும் மனதுக்குள் அடைத்து புழுங்கினால் பிரச்னைதான். அதனை வெளிப்படுத்தி விட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதில்தான் நாம் கவனம் கொள்ள வேண்டும். பொதுவாக அரசியலில், கருத்துக்களை மனம்விட்டுச் சொல்லாமல் தந்திர அரசியலைக் கையாளக்கூடியவர்கள் அதிகப் பிரச்னைளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தந்திர அரசியலுக்குள் நான் செல்வது கிடையாது. நேர்மையாக, தைரியமாக கருத்துக்களைச் சொல்கிறவர்கள் கலங்குவதில்லை.

No comments:
Post a Comment