Monetize Your Website or Blog

Thursday, 18 August 2016

வெற்றியை எதிர்த்து வழக்கு..! ஜெயலலிதாவுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஜெயலலிதா வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவிற்கு 2 வாரத்தில் பதில் அளிக்கும் படி ஜெயலலிதா மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.






நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி அந்த தொகுதி வாக்காளரான வழக்கறிஞர் லாவண்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்கும்படி முதல்வர் ஜெயலலிதா மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.




No comments:

Post a Comment