
ரியோ ஒலிம்பிக் போட்டியில், மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்று பதக்கப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளைப் பற்றிய ஆரவாரம் இந்தியாவில் குறைந்த நேரத்தில், புதிதாய் ஒரு நம்பிக்கை பிறந்து இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் பி.வி.சிந்து பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார். நேற்று இரவு, இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், வெண்கலப் பதக்கம் வென்று, இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.
இந்திய வீராங்கனை ஒருவர், மல்யுத்தத்தில் ஒலிம்பிக் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை. 58 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் கைர்ஜிஸ்தானின் ஐசுலு டைனிபெகோவாவை 8-5 என்ற கணக்கில் வீழ்த்தினார். முதலில் 0-5 என கணக்கில், சாக்ஷி பின் தங்கி இருந்தார். பின்னர் இரண்டாவது ஆட்டத்தில் 8-5 என்ற அதிரடியாக அசத்தி, வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

No comments:
Post a Comment