Monetize Your Website or Blog

Thursday, 16 June 2016

மேடையில் ஐஸ்வர்யா ராயை அவமதித்தேனா...? மனம் திறக்கும் அபிஷேக் பச்சன்!

அபிஷேக் பச்சன் -  ஐஸ்வர்யா ராய் இடையே மனக்கசப்பு,  பிரிவு என  சமீப நாட்களாக பாலிவுட் வட்டாரத்தில் கிளம்பிய பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக , 'ஐஸ்வர்யாவும் நானும் ஒருவரை ஒருவர் எவ்வளவு தூரம் நேசிக்கிறோம் என்பது எங்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்.' என பேட்டி அளித்துள்ளார் அபிஷேக் பச்சன். 


1994 ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் ஐஸ்வர்யாராய். பின்னர் பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்த ஐஸ்வர்யா ராய், மற்ற பல மொழிப் படங்களிலும்  நடித்து குறுகிய காலத்தில் பெரும் புகழ்பெற்றார். தமிழில் ஜீன்ஸ், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்,  ராவணன் போன்ற படங்கள் இவரது திறைமையை சொல்லும் படங்கள். 

கடந்த 2007 ம் ஆண்டு,  பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனும் இந்தி திரையுலக நடிகருமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். திருமணமான சில வருடங்களிலேயே ஐஸ்வர்யா -அபிஷேக் தம்பதியினரிடையே அவ்வப்போது ஈகோ மோதல் எழுந்தது. இதுகுறித்து ஊடகங்களிலும் அவ்வப்போது பரபரப்பான தகவல்கள் வெளியாயின. 

ஒருமுறை விருது வழங்கும் விழாவில்,  'இனி ஜஸ்வர்யா ராயை ஐஸ்வர்யா பச்சன் என்றே எழுதவேண்டும்'  என மீடியாக்களிடம் எகிறினார் அவரது மாமியார் ஜெயா பச்சன். அந்தளவிற்கு ஈகோ மோதல் இருந்ததாக சொல்வார்கள். இருப்பினும் அவ்வப்போது பொது இடங்களில்,  தனது மருமகள் ஐஸ்வர்யாவை,  அமிதாப் தம்பதியினர் புகழ்ந்தும் நெகிழ்ச்சியாகவும் பேசி இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பர். 
ஆனால் இம்முறை இருவருக்குமிடையே பிரச்னை விஸ்வரூமெடுத்துவிட்டதாக சொல்கிறார்கள்.    மும்பையில் அண்மையில் நடந்த திரைப்பட விழாவொன்றில் அமிதாப் பச்சன் தன் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். அப்போது திரையுலகத்தினர் கூட்டாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதன்படி ஐஸ்வர்யா,  தன் கணவர் அபிஷேக்கை அழைத்து வந்து மீடியாக்கள் முன் நின்று போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். 

அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக அபிஷேக்,  ஐஸ்வர்யாவின் கையை உதறிவிட்டு விடுவிடுவென மேடையில் இருந்து கிளம்பிச் சென்றார். இதனால் மீடியாக்காரர்கள் திகைத்துப்போயினர். ஐஸ்வர்யா பெரும் அவமானமடைந்து, அபிஷேக்கை சமாதானப்படுத்த பின்னாலேயே ஓடினார். 

இந்தக் காட்சி வட இந்திய ஊடகங்களில் வெளியாகி, மேலும் பரபரப்பை ஏற்படுத்த, அது அபிஷேக்-ஐஷ்வர்யா  இடையே மோதல்களும், மனவருத்தங்களும் இருப்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்திவிட்டதாக செய்திகள் வெளியாயின.


இதனால் இருவருக்கும் இடையேயான உறவில் பிளவு அதிகரித்துவிட்டதாக ஒருதரப்பினர் கூற, பச்சன் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்களோ அப்படியெல்லாம் எதுவுமில்லை என மறுத்தனர்.
இதனிடையே ஊடகங்களில் தங்களைப்பற்றி வெளியாகும் செய்திகள் வெறும் வதந்திதான் என்பதை உணர்த்தும் விதமாக அபிஷேக் - ஐஸ்வரயா தம்பதியர் அதன்பின்னர் ஓரிரு முறை டின்னருக்கு ஒன்றாக வந்ததை பார்த்ததாக பாலிவுட் வட்டாரங்கள் கூறின. 
இந்நிலையில்தான் தங்களைப்பற்றி வரும் செய்திகளுக்கு மறுப்பு  தெரிவிக்கும் விதமாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அபிஷேக் பச்சன், " ஊடகங்களில் எங்களைப்பற்றி வரும் செய்திகளால்  எனது தனிப்பட்ட வாழ்க்கையில் பாதிப்பு எதுவும் இல்லை. எங்களது வாழ்க்கையை நாங்கள் எப்படி வாழ வேண்டும் என எனக்கோ அல்லது ஐஸ்வர்யாவுக்கோ மூன்றாவது நபர் அறிவுறுத்துவதை நான் அனுமதிக்க முடியாது. ஐஸ்வர்யாவும் நானும் ஒருவரை ஒருவர் எவ்வளவு தூரம் நேசிக்கிறோம் என்பது எங்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். " எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து அபிஷேக் - ஐஸ்வர்யா தம்பதி குறித்த பரபரப்பு செய்திகள் தற்போதைக்கு பாலிவுட்டில் ஓரளவு அடங்கி உள்ளன.




No comments:

Post a Comment