ரத்ததானம்... சில குறிப்புகள்!
பொதுவாக, 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்களிடம் இருந்து மட்டுமே ரத்தம் பெறப்படுகிறது. இருப்பினும், சில நாடுகளில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரத்ததானம் செய்ய அனுமதி உண்டு.
ரத்ததானம் செய்பவரின் நலனும் மிக முக்கியம் என்பதில் அனைத்து நாடுகளும் உறுதிபூண்டுள்ளன. ரத்ததானம் பெறும் பை (கவர்) மற்றும் ஊசி தொற்று நீக்கப்பட்டடு (Sterilized) மிகவும் பாதுகாப்பானதாக இருக்கிறது. எனவே, தொற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை. பயப்படத் தேவை இல்லை.
பதின் வயதைத் தாண்டிய அனைவருக்கும் சராசரியாக 4-5 லிட்டர் ரத்தம் உடலில் இருக்கிறது. இதில், சராசரியாக 10 சதவிகிதம் அளவில்தான் ரத்தம் எடுக்கப்படுகிறது. பொதுவாக, உலகம் முழுவதும் ஒரு யூனிட் ரத்தம் (450 மி.லி) எடுக்கப்படும்.
ஆரோக்யமான ஒருவர், ஒவ்வொரு மூன்று - நான்கு மாதங்களுக்கும் ஒரு முறை ரத்ததானம் செய்யலாம். ரத்தம் மற்றும் அதில் இருந்து எடுக்கப்படும் உப பொருட்களைக் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே பாதுக்காப்பாக வைத்திருக்க முடியும். எனவே, ரத்தத்தின் தேவை எப்போதுமே அதிகம்.
ரத்ததானம் செய்பவர்கள் அதற்கு முந்தைய ஆறு மணி நேரத்தில் மிகவும் அதிகமான உணவுகளைச் சாப்பிடக் கூடாது. மிதமான அளவுகளில் சாப்பிடுவதே சிறந்தது. நன்றாகத் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். உணவுக்குப் பதிலாக ஜூஸும் குடிக்கலாம்.
ரத்ததானம் செய்யும்போது செலுத்தப்படும் ஊசியால் வலி அதிகம் இருக்காது. முள் குத்திய உணர்வுதான் இருக்கும். அரை மணி நேரத்தில் அந்த வலியும் சரியாகிவிடும்.
ஒரு முறை ரத்ததானம் செய்வதால், உங்களால் நான்கு உயிர்கள் வரை காப்பாற்றப்படுகிறது. மேலும், இது உங்கள் உடலுக்கும் நல்லது. புது ரத்தம் உடலுக்குள் உருவாவது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.

No comments:
Post a Comment