தமிழக முதல்வருக்கு நாங்கள் நன்றி கடன்பட்டிருக்கிறோம் என்று, நகை பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க முயன்று உயிரிழந்த காவலர் முனுசாமி மகள் கண்ணீருடன் தெரிவித்து உள்ளார்.
ஓசூரில் கடந்த 15-ம் தேதி நகை பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போலீஸ் ஏட்டு முனுசாமி, கொள்ளையர்களால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓசூரில் கடந்த 15-ம் தேதி நகை பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போலீஸ் ஏட்டு முனுசாமி, கொள்ளையர்களால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் நேற்று விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ''கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதில் உயிரிழந்த காவலர் முனுசாமி குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ.1 கோடி வழங்கப்படும். மேலும், உயிர் இழந்த முனுசாமியின் மகள் ரக்ஷனாவின் படிப்பு செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும்" என்றும் அறிவித்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் 1,182 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். கட்-ஆப் 198.4 வைத்துள்ளேன். மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதேபோல், என்னை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்று எனது அப்பா விரும்பினார்.
என் அப்பா உயிரிழந்துள்ள நிலையில், எனது படிப்பு என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் நாங்கள் இருந்தோம். இந்த நிலையில், எனது உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கு நான் மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சருக்கு நாங்கள் நன்றி கடன்பட்டிருக்கிறோம்" என்றார்.
காவலர் முனுசாமி மனைவி முனிலட்சுமி கூறும்போது, ''எனது கணவர் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிர் இழந்தது பற்றி தகவல் அறிந்து மிகவும் வருத்தமடைந்த முதலமைச்சர், எனது குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்கவும், எனது மகள் ரக்ஷனாவின் உயர்கல்வி செலவை தமிழக அரசு ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார்.
இதற்காக, முதலமைச்சருக்கு எனது குடும்பத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என் அப்பா உயிரிழந்துள்ள நிலையில், எனது படிப்பு என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் நாங்கள் இருந்தோம். இந்த நிலையில், எனது உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கு நான் மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சருக்கு நாங்கள் நன்றி கடன்பட்டிருக்கிறோம்" என்றார்.
இதற்காக, முதலமைச்சருக்கு எனது குடும்பத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக முதல்வருக்கு நானும், எனது குடும்பமும் வாழ்நாள் முழுவதும் நன்றி கடன் செலுத்த கடமைப்பட்டுள்ளோம்" என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment