தமிழக பா.ஜ.கவின் பொதுக்குழு கூட்டம் வருகிற 25ம் தேதி பழனியில் நடக்க இருக்கிறது. ' வழக்கமாக பொதுக்குழுவில்தான் புதிய மாநிலத் தலைவர் தேர்வு செய்யப்படுவார். அவ்வாறு தேர்தல் நடக்கவில்லையென்றால், புதிய மாநிலத் தலைவர் நியமிக்கப்படலாம்' என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள்.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக பா.ஜ.கவின் 42 மாவட்டங்களுக்கும் தலைவர் பதவிகள் நிரப்பப்பட்டன. மாநில நிர்வாகிகள் பட்டியலும் மாற்றியமைக்கப்பட்டு வெளியிடப்பட்டன. ' புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாவட்ட, மாநில நிர்வாகிகளில் சிலர் மிகவும் புதியவர்கள். ஒரு சிலர் எப்படி இந்தப் பதவிக்கு வந்தார்கள்? என்ற விவாதமும் நடந்து கொண்டு வருகிறது. தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை பதவியில் நியமிக்கும் போக்கு நடந்து வருகிறது' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக பா.ஜ.கவின் 42 மாவட்டங்களுக்கும் தலைவர் பதவிகள் நிரப்பப்பட்டன. மாநில நிர்வாகிகள் பட்டியலும் மாற்றியமைக்கப்பட்டு வெளியிடப்பட்டன. ' புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாவட்ட, மாநில நிர்வாகிகளில் சிலர் மிகவும் புதியவர்கள். ஒரு சிலர் எப்படி இந்தப் பதவிக்கு வந்தார்கள்? என்ற விவாதமும் நடந்து கொண்டு வருகிறது. தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை பதவியில் நியமிக்கும் போக்கு நடந்து வருகிறது' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தமிழக பா.ஜ.க நிர்வாகி ஒருவர், " சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மாநில, மாவட்ட நிர்வாகிகள் பட்டியலில் மாற்றம் செய்து அறிவிப்பை வெளியிட்டார் தமிழிசை சௌந்தர்ராஜன். ஒவ்வொருமுறையும் புதிய மாநிலத் தலைவர் தேர்வு செய்யப்படும்போது, பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தி அறிவிப்பு வெளியிடப்படும். இப்படித்தான் பொன்.ராதாகிருஷ்ணன் மூன்று முறைக்கு மேல் தலைவர் பதவியில் நீடித்தார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்போதும், இதே நடைமுறைதான் கடைபிடிக்கப்பட்டது. 2015 டிசம்பர் மாதம் வரையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பதவிக்காலம் இருந்தது. அவர் அமைச்சர் ஆனதால் தமிழிசைக்கு தலைவர் பதவி அளிக்கப்பட்டது.
அடுத்து வந்த மாதங்களில், அதிகாரபூர்வமாக புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. சென்னை மழை வெள்ளம் உள்ளிட்ட சில காரணங்களைக் காட்டி, மாநிலத் தலைவர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. ' தமிழிசையே தொடர்வார்' என அகில இந்தியத் தலைமை வாய்மொழியாக அறிவித்தது. தமிழக பா.ஜ.கவின் இருபது ஆண்டு வரலாற்றில் தேர்வு செய்யப்படாத, நியமன தலைவர் தொடர்வது இதுதான் முதல்முறை. பொதுவாக, பொதுக்குழுவில்தான் மாநிலத் தலைவர் தேர்வு செய்யப்படுவார். தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் புதிய தலைவரை தேர்வு செய்வார்கள். ஆனால், பொதுக்குழு நிகழ்ச்சி நிரலில் அப்படி எதுவும் நடப்பதான அறிகுறியே இல்லை.
தேர்தலுக்கு முன்பு மண்டலத் தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டன. அதன்பிறகு, தேர்தலை காரணம் காட்டி, 42 மாவட்டங்களுக்கும் தலைவர் பதவிகள் நிரப்பப்பட்டுவிட்டன. இதற்கும் முறையான தேர்தல் நடத்தப்படவில்லை. பொதுக்குழுவில் முறையாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பங்கேற்கும் வாய்ப்பு இல்லை. அப்படியானால், பழைய பொதுக்குழு உறுப்பினர்களே பங்கேற்பார்களா? என்பதற்கும் விடையில்லை. இரண்டு நாள் பொதுக்குழுவில் சர்ச்சை எழுவதற்கே வாய்ப்புகள் அதிகம்" என்றார் விரிவாக.
பா.ஜ.கவின் அகில இந்திய செயற்குழு கூட்டம் நேற்று நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் பதவி மாற்றம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ' 2018 வரையில் மாநிலத் தலைவர் பதவி தொடருமா? என்பது அகில இந்தியத் தலைமையின் கைகளில் இருக்கிறது' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.
No comments:
Post a Comment