Monetize Your Website or Blog

Thursday, 16 June 2016

தன் எம்.பி.க்கள் ஹிந்தி கற்கலாம், சாமானியன் கற்க கூடாதா? -கருணாநிதியை சாடும் பொன்.ராதாகிருஷ்ணன்

தன்னுடைய எம்.பி.க்களை ஹிந்தை கற்க அனுமதித்து கருணாநிதிக்கு, சாமானிய மக்கள் ஹிந்தி கற்க கூடாது என சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்து உள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ''தமிழகத்தில் 10 நவோதயா பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.




                     

பிரதமருடான தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் சந்திப்பு நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற தமிழக முதல்வரிடம் நான் எடுத்துரைந்துள்ளேன். தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை பா.ஜ.க. தனியாக சந்திக்கும்.

ஹிந்தி மொழியை அனுமதிக்காததால் மட்டும் கடந்த 50 ஆண்டுகளில் தமிழ் மொழி என்ன வளர்ச்சி கண்டுள்ளது. அதனால், மொழி பிரச்னையை வைத்து கொண்டு கருணாநிதி, தமிழக மக்களுக்கு துரோகம் செய்கிறார்.

50 வருஷத்திற்கு முன் நீங்கள் சொன்னதை கடைபிடித்து இருக்கிறீர்களா?, தி.மு.க. கடைபிடித்து இருக்கிறதா?. எனக்கு தெரியும், நாங்கள் ஹிந்தி படிக்கக்கூடிய இடத்தில், டெல்லியில் நான் ஹிந்தி படிக்கக்கூடிய அதே ஆசிரியரிடம் தி.மு.க.வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் அல்ல இருவர் அல்ல பலர் படித்ததை நான் என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.



இவருக்கு ஹிந்தி தெரியும் அதனால் அமைச்சர் பொறுப்பு கொடுக்கலாம் என்று கலைஞரே சொல்லி இருக்கிறார். ஆக, கலைஞரே அமைச்சர் பொறுப்பு எடுப்பதற்கு இதுதான் தகுதி என்று சொன்னபிறகு, ஏழை வீட்டு மாணவர் அதை படிக்கக்கூடாது என்று கலைஞர் எப்படி சொல்ல உரிமை பெற்றவராக இருக்க முடியும்" என்று விமர்சித்தார்.


No comments:

Post a Comment