இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கும்ப்ளே நியமிக்கப்பட்ட நிலையில், தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியே கும்ப்ளேவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு பயிற்சியாளர் பதவியில் அவரை அமர வைத்ததாகச் செய்திகள் கசிந்தன.
குறிப்பாக தனக்குத் நேர்காணல் நடந்த போது கங்குலி அங்கு இல்லை என்று ரவி சாஸ்திரி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். தன்னிடம் ஸ்கைப்பில் வந்து கூட கங்குலி எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என்றும் ரவி சாஸ்திரி தொடர்ந்து குறை கூறி வந்தார்.
இந்த நிலையில் ரவிசாஸ்திரியின் குற்றச்சாட்டுகளுக்கு கங்குலி பதில் அளித்துள்ளார்.
''இது என் மீது தொடுக்கப்பட்டத் தனிப்பட்ட தாக்குதல். இந்திய அணியின் பயிற்சியாளராகும் வாய்ப்பு கிடைக்காதற்கு கங்குலியே காரணம் என்று ரவி சாஸ்திரி நினைத்தால் அவர் முட்டாள்கள் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை, பயிற்சியாளர் என்பது மிக முக்கியமான பொறுப்பு.

அதற்கான நேர்காணலில் கூட ரவிசாஸ்திரியால் நேரில் பங்கேற்க முடியவில்லை. பாங்காங்கில் இருந்து கொண்டு வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றார். நேர்காணலின் போது அவர் நேரில் ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால் கும்ப்ளே நேரடியாக நேர்காணலுக்கு வந்திருந்தார். சுமார் 2 மணி நேரம் தனது பயிற்சி திட்டங்கள் குறித்து பேனலிடம் விளக்கி கூறினார்.
ரவிசாஸ்திரியின் கருத்து எனக்கு அதிர்ச்சியையும் மன வேதனையையும் தந்துள்ளது. அவரது கருத்துகள் துரதிர்ஷ்டவசமானவை. இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் பல ஆண்டு காலம் தொடர்பில் உள்ள ஒருவருக்கு இது போன்ற கமிட்டியின் செயல்பாடுகள் தெரியாதா? அதில் உள்ள கடினமான விஷயங்கள் குறித்தெல்லாம் தெரியாதா? அப்படிபட்டவர் இப்படியெல்லாம் கருத்து தெரிவித்திருக்கக் கூடாது. கொஞ்சம் முதிர்ச்சியுடன் நடந்து கொண்டிருக்க வேண்டும்.
பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் செயற்குழு கூட்டம் , நேர்காணல் நடந்த அன்றைய தினம் மாலை 5 மணிக்கு கொல்கத்தாவில் நடந்தது. அந்த கூட்டத்திற்கு தலைவர் என்ற முறையில் நான் கட்டாயம் பங்கேற்க வேண்டியது அவசியம். அதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பே இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இமெயில் மூலம் தகவல் அனுப்பி அனுமதியும் பெற்றிருந்தேன்.
முதலில் ரவிசாஸ்திரியிடம் மாலை 4.15 மணிக்கு நேர்காணல் நடத்தவே திட்டம் இருந்தது. ஆனால் ஒவ்வொருவரும் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால், மாலை 5 மணி வரைத் தள்ளி போய் விட்டது. தொடர்ந்து மற்றவர்களிடம் ‘பெங்கால் கிரிக்கெட் சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு மாலை 6 மணிக்கு மீண்டும் இணைந்து கொள்கிறேன்’ என கூறி விட்டு புறப்பட்டேன். நடந்த உண்மை இதுதான்'' என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment