Monetize Your Website or Blog

Thursday, 16 June 2016

ஜல்லிக்கட்டு தடை நீக்குவோம், லோக்ஆயுக்தா அமல்படுத்துவோம்..! ஆளுநர் உரையின் சிறப்பு அம்சம்

ஆளுநர் ரோசய்யா உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் உரையின் பிறப்பு அம்சங்கள் வருமாறு..!

* முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* சிறு, குறு தொழில் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* சிறு, குறு விவசாயிகளின் பயிர்கடன் தமிழக அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

* மது விலக்கை படிப்படியாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

* முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி உயரத்திற்கு நீரைத் தேக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.



* காவிரி மேலாண்மை வாரியம், நீர் ஒழுங்காற்று குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தில் உரிய உத்தரவு பெறப்படும்.

* இலங்கையில் போரின்போது இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

* இலங்கைத் தமிழர்களுக்கு சமஉரிமைகள் கிடைப்பதற்காக தொடர்ந்து குரல் கொடுக்கப்படும். 

* இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம்.

* தமிழகத்தில் உயர்கல்வி பயில அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது.

* இலங்கைக் தமிழர்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

* தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழ்நாடு கிராமப்புற குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். 

* இலவச கறவை மாடுகள், ஆடுகள் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.  

* ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

* 3 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்திறன் உருவாக்கப்படும். 

* ஸ்மார்ட் சிட்டி திட்டத்துடன் இணைந்து நகர்ப்புற கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

* தமிழகத்தில் உள்ள வேளாண் சந்தைகள் தேசிய சந்தைகளுடன் இணைக்கப்படும்.

* உயர்கல்வி பயில மாணவர்களுக்கான நிதி உதவி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* 5 ஆண்டுகளில் 13 ஆயிரம் மெகாவாட் அனல்மின் திறன் உருவாக்கப்படும்.

* சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டப்பணிகள் விரைவாக செயல்படுத்தப்படும்.



* சென்னை அருகே மூடப்பட்ட நோக்கியா ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* மருத்துவ பொதுநுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற தொடர்ந்து பாடுபடுவோம். 
 



No comments:

Post a Comment